பக்கம் எண் :

இசைக்கலை

125


  

இப்பெண் இராகங்கள் பைரவியின் மனைவிகள் எனப்படும். இந்த
இராகங்களுக்கு அதிதேவதை ஈசன்.

  

பூபாளம் என்பது ஆண் இராகம். வேளாவளி, மலகரி, பௌளி
ஆகிய இவை பூபாளத்தின் மனைவியான பெண் இராகங்கள். இவற்றிற்கு
அதிதேவதை திருமால்.
  

சீராகம் என்பது ஆண் இராகம். இந்தோளம், பல்லதி, சாவேரி
என்பவை சீராகத்தின் மனைவியரான பெண் இராகங்கள். இவற்றிற்கு
அதிதேவதை சரசுவதி.
  
         படமஞ்சரி என்பது ஆண் இராகம். தேசி, இலலிதை, தோடி
என்பவை இதன் மனைவியரான பெண் இராகங்கள். இவற்றிற்கு அதிதேவதை
இலக்குமி.

  

பங்காளம் என்பது ஆண் இராகம். தன்னியாசி, காம்போதி,
கௌளி என்பன இதன் மனைவியரான பெண் இராகங்கள். இவற்றின்
தேவதை விநாயகன்.

  

நாட்டை ராகம் என்பது ஆண் இராகம். தேசாட்சரி. காந்தாரி,
சாரங்கம் என்பன இதன் மனைவியரான பெண் இராகங்கள். இவற்றின்
தேவதை தும்புருவன்.