142 |
தமிழர் வளர்த்த
அழகுக் கலைகள் |
இறைவன்
‘‘வண்ணமலர்ச் சரங்கோத்து மதனவேள்
மிகவெய்யக்
கண்ணளவோர் புலனல்லாக் கனல்விழியால் எரித்தனையால்
எண்ணிறந்த தேவர்களும் இருடிகளும் எழுந்தோட
ஒண்ணுதலாள் பாகங்கொண் டொருதனியே யிருந்தனையே.’’
திங்கள்
‘‘குரைகடல் மதிக்கு மதலையை
குறுமுய லொளிக்க மரணினை
இரவிரு ளகற்றும் நிலவினை
யிறையவன் முடித்த அணியினை
கரியவன் மனத்தி னுதித்தனை
கயிரவ மலர்த்து மவுணனை
பரவுநர் தமக்கு நினதரு
பதமலர் தபுக்க வினையையே.’’
பண் - கௌசியம் தாளம் - இரண்டொத்துடைத் தடாரம்
இனி, இந்த ஆடல்கள் ஒவ்வொன்றையும் விளக்குவோம்.
1. அல்லியம்: இது, கண்ணன் யானையின் மருப்பை ஒடித்ததைக் காட்டும் ஆடல்.
‘‘கஞ்சன் வஞ்சகங் கடத்தற் காக
அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள்
அல்லியத் தொகுதி.’’1
1. சிலம்பு. கடலாடு காதை, 46 - 47
|