‘‘அஞ்சன வண்ணன் ஆடிய ஆடல் பத்துள், கஞ்சன் வஞ்சத்தின் வந்த
யானையின்
கோட்டை ஒசித்தற்கு
நின்றாடிய அல்லியத் தொகுதி யென்னுங்
கூத்து’’ என்பது
அடியார்க்கு நல்லார் உரை.
இந்த ஆடலுக்கு ஆறு உறுப்புகள் உண்டு.
2. கொடுகொட்டி: சிவபெருமான் முப்புரத்தை எரித்தபோது, அது
எரிமூண்டு
எரிவதைக்
கண்டு வெற்றி மகிழ்ச்சியினாலே கைகொட்டி நின்று
ஆடிய ஆடல் இது.
தீப்பற்றி எரிவதைக் கண்டு
மனம் இரங்காமல்
கைகொட்டியாடியபடியினாலே கொடுகொட்டி
என்னும் பெயர் பெற்றது.
கொட்டிச் சேதம்
என்றும் இதற்குப் பெயர் உண்டு.
‘‘பாரதி யாடிய பாரதி யரங்கத்துத்
திரிபுர மெரியத் தேவர் வேண்ட
எரிமுகப் பேரம் பேவல் கேட்ப
உமையவள் ஒருதிற னாக வோங்கிய
இமையவன் ஆடிய கொடுகொட்டி யாடல்’’1
என்பது சிலப்பதிகாரம்.
‘‘தேவர், புரமெரிய வேண்டுதலால் வடவை எரியைத்
தலையிலேயுடைய பெரிய
அம்பு
ஏவல் கேட்ட
வளவிலே, அப்புரத்தில்
அவுணர் வெந்து விழுந்த வெண்பலிக்
குவையாகிய
பாரதி யரங்கத்திலே,
உமையவள் ஒரு கூற்றினளாய் நின்று பாணி தூக்கு சீர்
என்னும்
தாளங்களைச் செலுத்த, தேவர்
யாரினுமுயர்ந்த இறைவன்
சயானந்தத்தால்
கைகொட்டி
நின்று ஆடிய கொடுகொட்டி என்னும் ஆடல்’’
என்பது
அடியார்க்கு நல்லார்
உரை.
1. சிலம்பு. கடலாடு காதை, 39 - 44
|