பக்கம் எண் :

164
164

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்


 

அழகிய நரம்பும் மந்தர மத்திம தாரமும் ஆராய்ந்து என்றவாறு, ஆய்ந்து
பாடினாள்.1

 

ஆடல் வென்றி

 

     இசைத் தமிழோடு தொடர்புடையது ஆடற் கலை. இதன்
வென்றியையும் பு.வெ.மாலை, பெருந்திணைப் படலம் கூறுகிறது. அச்செய்யுள்
இது:

 

     ‘‘கைகால் புருவங்கள் பாணிநடை தூக்குக்

    கொய்பூங்கொம் பன்னாள் குறிக்கொண்டு - பெய்பூப்

    படுகளிவண் டார்ப்பப் பயில்வளைநின் றாடும்

    தொடுகழல் மன்னன் துடி.’’

 

     இதன் பொருள்: கையாலும், காலாலும், புருவத்தாலும், கண்ணாலும்
தாளத்தையும், செலவையும், இசையையும், கொய்யப்பட்ட பூங்கொம்பன்னாள்
கருதிக் கொண்டு, சூடிய பூவில் மிக்க களிப்பினையுடைய வண்டு
ஆரவாரிப்பச் செறிந்த வளையினையுடையாள் நின்று ஆடும், கட்டுங் கழல்
வேந்தனுக்குத் துடிக்கூத்தை என்றவாறு.2

 

கலைஞரைப் போற்றல்

 

     பரதநாட்டியம் பயின்ற பெண்கள், அரசன் ஆடலாசிரியர் முதலியோர்
முன்னிலையில் அரங்கேறிப் பிழையில்லாமல் ஆடினார்களானால்,
அவர்களுக்கு அரசன் 1,008 கழஞ்சு பொன்னைப் பரிசு அளித்தான்.
அன்றியும், ஆடற்கலையில் சிறப்படைந்தவருக்குத் தலைக்கோலி என்னும்
பட்டத்தையும் வழங்கினான். நாட்டியக் கலையில் தேர்ந்த மகளிர்
தலைக்கோலிப் பட்டம், பெற்றிருந்த செய்தியைப் பழங்காலத்துச்
சாசனங்களும் கூறுகின்றன. அவர்களைப் பற்றிக் கூறுவோம்.

 


1&2. மாகறலூர் கிழான் சாமுண்டிதேவ நாயகன் உரை.