பக்கம் எண் :

கூத

கூத்துக் கலை

165


   

    நக்கன் உடைய நாச்சியார் என்பவருக்கு, ஞான சம்பந்தத் தலைக்கோலி
என்னும் சிறப்புப் பெயர் வழங்கப்பட்டது.1

 

    ஐயாறப்பர் கோயிலுக்கு வடபக்கம் பெரிய பிரகாரத்தில் இருக்கும்
சாசனம் இதைக் கூறுகிறது. இக்கோயிலுக்குப் பழைய பெயர் ஒலோக
மாதேவீச்சரம் என்பது. முதலாம் இராசராசன் அரசியரில் ஒருவர் ஒலோக
மாதேவியார். இவர் கட்டியபடியால் இக்கோயிலுக்கு இப்பெயர் வாய்த்தது.
இக்கோயிலில், ஐயாறன் கலியுகச் சுந்தரத் தலைக்கோலி என்பவள்
இருந்தாள். இவள் ஆடல் பாடல்களில் வல்லவரான முப்பது
மாதர்களுக்குத் தலைவியாக இருந்தாள்.

 

    நக்கன் பிள்ளையாள்வி என்பவளுக்கு நானாதேசி தலைக்கோலி
என்னும் பட்டம் வழங்கப்பட்டது. நக்கன் உலகுடையாள் என்பவளுக்குத்
தேவகன் சுந்தரத் தலைக்கோலியார் என்னும் பட்டம் வழங்கப்பட்டது.2

 

 சோழ தலைக்கோலி என்பவளை இன்னொரு சாசனம் கூறுகிறது.3

 

    திருவொற்றியூரில் உறவாக்கின தலைக்கோலி என்னும் மங்கை
இருந்தாள். திரிபுவன சக்கரவர்த்தி இராஜஇராஜ சோழன் (III) காலத்தில்
இவள் இருந்தாள். திருவொற்றியூர் இராஜராஜன் மண்டபத்தில், இராஜராஜ

சோழன் முன்னிலையில் இவள் அகமார்க்கப்பாட்டைப் பாடினாள். இதற்காக
இவ்வரசன் இவளுக்கு 60 வேலி நிலம் தானம் செய்தான். இந்நிலங்கள்
மணலி என்னும் கிராமத்தில்

 


1.  Ep. Col.247 of 1932-33.

2.  Ep. Col.240,241 of 1932-33.

3. Ep. Col.383 of 1921.