166 |
தமிழர் வளர்த்த
அழகுக் கலைகள் |
இருந்தன மணலி கிராமத்துக்கு இவள் பெயரால் உறவாக்கின நல்லூர்
என்றும்
பெயரிட்டான்.1
ஐஞ்ற்றுத் தலைக்கோலி என்பவள் பெயரை இன்னொரு சாசனம்
கூறுகிறது.2
உய்யவந்தாள் அழகிய சோடி என்னும் பெயருள்ள வீரசேகர நங்கை,
திருவிழாக் காலத்தில்
நடனம் நிகழ்ச்சியதற்காக ஒரு மாநிலம் தானம்
வழங்கப்பட்ட செய்தியை ஒரு சாசனம் கூறுகிறது.3
நக்கன் செய்யாள் என்பவளுக்குக் காலிங்கராயத் தலைக்கோலி
என்றும், நக்கன் நாச்சியார்
என்பவளுக்குத் தனி ஆணையிட்ட பெருமாள்
தலைக்கோலி என்றும் பட்டங்கள் அளிக்கப்பட்டன என்று
எம்மண்டலமும்
கொண்டருளிய குலசேகரதேவர் என்னும்
பாண்டிய அரசன் காலத்துச்
சாசனம் கூறுகிறது.4
நக்கன் நல்லாள் என்பவளுக்கு மூவாயிரத் தலைக்கோலி என்னும்
பெயர் வழங்கப்பட்டது.5
நக்கன் வெண்ணாவல் என்பவளுக்குத் தில்லை அழகத் தலைக்கோலி
என்னும் பெயர் வழங்கப்பட்டதை,
திருச்சி தாலுக்கா, அல்லூர்
பஞ்சநதீசுவரர் கோயிலில் உள்ள கோ இராஜராஜ கேசரிவர்மன் சாசனம்
கூறுகிறது.6
நக்கன் பிள்ளையாள்வி என்னும் ஆடல் மங்கைக்கு நானா தேசிகத்
தலைக்கோலியார்
என்றும், நக்கன்
1. Ep.
Col. 211 of 1912.
2. Ep.
Col. 225 of 1912.
3. Ep.
Co. 557 of 1916.
4. No.
169, S.I.I., Vol. VIII.
5. No.
170, S.I.I. Vol. VIII.
6. No.
678, S.I.I. Vol. VIII.
|