உலகுடையாள் என்னும் ஆடல் மங்கைக்குத் தேவகள் சுந்தரத்
தலைக்கோலியார்
என்றும் பட்டங்கள் வழங்கப்பட்டன என்று சாசனங்கள்
கூறுகின்றன.1
புதுக்கோட்டையில் உள்ள சாசனம் ஒன்று சித்திரைத்
திருவிழாவின்போது
ஒன்பது சாந்திக் கூத்து ஆடுவதற்காக ஏழு
நாட்டுநங்கை என்னும் ஆடல் மங்கைக்கு நிலம் வழங்கப்பட்டதைக்
கூறுகிறது.2
திருநெல்வேலி தாலுக்கா, வள்ளியூர் கோயில் சாசனம் ஒன்று,
உலக
முழுதுடையாள் என்னும் பெயருள்ள ஆடல் மங்கை, சாந்திக் கூத்தி
சொக்கட்டாயாண்டார் என்னும் சிறப்புப்பெயர் பெற்றிருந்ததைக் கூறுகிறது.3
திருவொற்றியூர் கோயிலில் தேவரடியார், பதியிலார், இஷிபத்தினியார்
என்று மூன்று வகையான மகளிர் இருந்தனர் இவர்களில், பதியிலாரும்
தேவரடியாரும் சாந்திக் குனிப்பம் என்னும் ஆடல் புரிந்தனர். அவ்வமயம்
இஷிபத்தினியார் அகமார்க்கம், வரிக்கோலம் என்றும்
இசைப் பாடல்களைப்
பாடினார்கள். இஷிபத்தினியார் சாந்திக் குனிப்பம், சொக்கம்
என்னும்
ஆடல்களை ஆடியபோது, பதியிலார் இசை பாடினார்கள் என்று
ஒரு சாசனம் கூறுகிறது.4
இது போலவே இசைக்கலைஞருக்கும் கூத்துக்
கலைஞருக்கும் சிறப்புப்
பெயர்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன. இச்செய்திகளையும் பழைய சாசன
எழுத்துக்களிலிருந்து அறிகிறோம்.
இயல், இசை, நாடகம் என்னும்
முத்தமிழிலும் வல்லவரான பெருநம்பி
என்பவருக்கு முத்தமிழ் ஆசாரியார்
1. Ep.
Col. Nos.240,241 of 1932-33; Ep. Rep. 1932-33.
2. Ep.
Col. 253 of 1914.
3. Ep.Col.364 of 1929 - 30.
4. Ep. Rep. 1913. p. 127.
|