பக்கம் எண் :

168
168

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்


 

என்னும் சிறப்புப் பெயர் வழங்கப்பட்டதோடு, பொய்யாமொழி மங்கலம்
என்னும் ஊரை அவருக்குத் தானமாக வழங்கிய செய்தியையும் சாசனம்
கூறுகிறது.1

 

புதுக்கோட்டை, பொன்னமராபதி, சுந்தரராஜப் பெருமாள் கோயில்
சாசனம் ஒன்று, சீரங்கநாயகி என்பவளைப் புகழ்ந்து பாடுகிறது.2 இவள்
நாட்டியக் கலையில் வல்லவள்.

 

திருந்துதேவன்குடி அருமருந்தீசுவரர் கோயிலில் வீணை
வாசித்தவருக்கு நிலம் தானம் கொடுக்கப்பட்டது,3

 

தென்ஆர்க்காடு மாவட்டம், திண்டிவனம் தாலுகா, கிடங்கில் என்னும்
ஊரில் உள்ள கோயிலில் வீணை வாசித்தவருக்கும் வாய்பாட்டுப்
பாடியவருக்கும் நிலம் தானம் செய்யப்பட்டது.4

 

காஞ்சிபுரத்துக்கடுத்த ஆர்ப்பாக்கத்து ஆதிகேசவப் பெருமாள்
கோயிலில் இசை பாடியும் வாத்தியம் வாசித்தும் இன்னிசை நிகழ்த்தியவர்கள்
ஏழு பேருக்கு உணவுக்காக நிலம் தானம் செய்யப்பட்டது.1

 

திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயிலில் வீணை வாசித்தவருக்கும்
இசைப்பாட்டுப் பாடியவருக்கும் தானம் வழங்கிய செய்தியை ஒரு சாசனம்
கூறுகிறது.2

 


1.       Ep. Col.301 of 1909; Ep.Rep.1910, p.29.

2.      No. 78, Stone Inscriptions of Pudukkottai State.

3.     47 of 1910;Ep. Rep. 1910, p.66.

4. 141 of 1900; Epi. Rep. 1900, p.9.

5.       145 of 1923.

6.      54 of 1906.