மாயவரம் திருமணஞ்சேரி கிராமத்தில், கோயிலில் குடமுழா வாசித்த
ஒருவரை ஒரு சாசனம் கூறுகிறது.1
திருவாவடுதுறைக் கோயிலில், புரட்டாசி மாதத் திருவிழாவில்,
ஏழு
அங்கமுடைய ஆரியக் கூத்து ஆடின குமரன் ஸ்ரீகண்டன் என்பவருக்குக்
காந்தளூர்க் கிராமத்தார் சாக்கைக் காணியாக நிலம் கொடுத்தார்கள்.2
இக்கோயிலில் நானாவித நடனசாலை என்னும் பெயருடைய மண்டபம்
ஒன்று
இருந்தது.
உடையார்பாளையம் தாலுக்கா, காமரசவல்லி கார்க்கோடக
ஈசுவரர்
கோயிலில், மார்கழித் திருவாதிரை, வைகாசித் திருவாதிரைகளில் மும்மூன்று
சாக்கைக்
கூத்து ஆடுவதற்காக, சாக்கை மாராயன் விக்கிர சோழன் என்னும்
ஆடல் ஆசிரியனுக்கு நிலம் வழங்கப்பட்டது.3
திருநெல்வேலி ஜில்லா, திருச்செந்தூர் தாலுக்கா, ஆத்தூர்
சோமநாதீசுவரர்
கோயிலில் அழகிய பாண்டியன் கூடம் என்னும் ஆடல்
மண்டபம் இருந்தது. அதில் ஆடிய சாந்திக் கூத்தனுக்கு
நிலம்
வழங்கப்பட்டது.4
மிழலை நாட்டு வீரநாராயணபுரத்துக் கயிலாயமுடையார் கோயிலில்,
சித்திரைத் திருவிழாவின்போது ஐந்து தமிழக் கூத்து ஆடுவதற்காக,
விக்கிரமாதித்தன் திருமுதுகுன்றன் என்னும்
விருதராஜபயங்கர ஆசாரியன்
என்பவருக்கு நிலம் தானம் செய்யப்பட்டது.5
1.
17 of 1914.
2.
120 of 1925.
3.
65 of 1914.
4.
439 of 1929-30; 445 of 192-30.
5.
90 of 1931 - 32.
|