|
44 |
தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் |
6. முடி அல்லது கலசம். இதற்கு ஸ்தூபி, சிகை, குளம் முதலிய
பெயர்கள் உண்டு.
கோயிற் கட்டடத்தில் அமையவேண்டிய இந்த ஆறு உறுப்புக்களுக்கும்
சில அளவுகள் உள்ளன. அந்த
அளவுகளையெல்லாம் தீர
ஆராயவேண்டியதில்லை. ஆனால் பொதுவான அளவை மட்டும்
தெரிந்துகொள்வோம்.
அந்த அளவுகளாவன:
1. அடி அல்லது அதிஷ்டானத்தன் உயரம் 1 பங்கு.
2. உடல் அல்லது பாதத்தின் உயரம் 2 பங்கு.
3. தோள் அல்லது மஞ்சத்தின் உயரம் 1 பங்கு.
4. கழுத்து அல்லது கண்டத்தின் உயரம் 1 பங்கு.
5. தலை அல்லது பண்டிகையின் உயரம் 2 பங்கு.
6. முடி அல்லது ஸ்தூபியின் உயரம் 1 பங்கு.
இந்த அளவு ஒருநிலையை யுடைய சாதாரணக் கோயில்களுக்காகும்.
இதுவன்றி,
வேறு சில அளவுகளும் ஒருநிலைக் கோயிலுக்கு உண்டு.
இரண்டு நிலை மாடக்கோயிலின் அமைப்பு:- 1. தரை, 2. சுவர்,
3. தளவரிசை,
4. சுவர், 5. தளவரிசை, 6. கழுத்து, 7. கூரை, 8. கலசம் என
அமையும்.
மூன்று நிலை மாடக்கோயிலின் அமைப்பு:- 1. தரை, 2. சுவர்,
3. தளவரிசை, 4. சுவர், 5. தளவரிசை, 6. சுவர், 7. தளவரிசை,
8. கழுத்து, 9. கூரை, 10. கலசம் என இவ்வாறு அமையும். கோயிற்
கட்டடத்தின்
பல்வேறு அமைப்புகளைச் சிற்ப நூலில் கண்டு கொள்க.
கோயில் கட்டடங்கள் கட்டப்படும் பொருள்களைக் கொண்டு அவை
மூன்று
பெயர்களைப் பெறுகின்றன.
அவை
|