|
46 |
தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் |
சுத்தம், மிஸ்ரம், சங்கீர்ணம் என்பன. முழுவதும் மரத்தினாலோ,
செங்கல்லினாலோ
அல்லது கருங்கல்லினாலோ
கட்டப்பட்ட
கோயில்களுக்குச் சுத்த கட்டடம் என்றும்,
இரண்டு பொருள்களைக் கலந்து
அமைக்கப்பட்ட
கோயில்களுக்கு மிஸ்ர கட்டடம்என்றும், இரண்டிற்கு
மேற்பட்ட பொருள்களால் கட்டப்பட்ட
கோயில்களுக்குச்
சங்கீர்ணம் என்றும் பெயர்கள் கூறப்படுகின்றன.
கோயிலின் வகைகள்
கடவுள் அல்லது தெய்வங்கள் எழுந்தருளியிருக்கும்
திருவுண்ணாழிகைக்கு
விமானம் என்று
பெயர். இந்த விமானங்களின்
வெவ்வேறு விதமான அமைப்பைக்
கொண்டு இவற்றிற்கு வெவ்வேறு பெயர்
கூறுவர். முக்கியமாகக் கூரையின் அமைப்பைக் கொண்டு அவைகளுக்கு
வெவ்வேறு பெயர்களைக் கூறுகிறார்கள்.
திருநாவுக்கரசு
சுவாமிகள்
தமது திருஅடைவு திருத்தாண்டத்தின் 5ஆம் செய்யுளில், கோயில்
கட்டட
வகைகளின் பெயர்களைக் கூறுகிறார். அச்செய்யுள் இது:
‘‘பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
பெருங்கோயில் எழுபதினோ டெட்டு மற்றும்
கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்
கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக் கோயில்
இருக்கோதி மறையவர்கள் வழிபட் டேத்தும்
இளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில்
திருக்கோயில் சிவனுறையும் கோயில் சூழ்ந்து
தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரு மன்றே.’’
இப்பாடலிலே, சோழன் செங்கணான் கட்டிய எழுபத்தெட்டுக் கோயில்களைக
கூறிய
பின்னர், கரக்கோயில்,
ஞாழற் கோயில், கொகுடிக் கோயில்,
இளங்கோயில்,
|