|
மணிக்கோயில், ஆலக்கோயில் என்று சில வகையான கோயில்களைக்
கூறுகிறார்.
சிற்ப நூல்கள் விஜயம், ஸ்ரீபோகம், ஸ்ரீவிசாலம், ஸ்கந்தகாந்தம்,
ஸ்ரீகரம்,
ஹஸ்திபிருஷ்டம், கேசரம் என்னும் ஏழு விதமான கோயில்களைக்
கூறுகின்றன.
காமிகாகமமும் இப்பெயர்களைக் கூறுகிறது.
திருநாவுக்கரசு சுவாமிகள் தமிழ்ப் பெயரால் கூறுகிறதையே சிற்ப
நூல்கள்
வடமொழிப் பெயரினால் கூறுகின்றன. பெயர் வேற்றுமையே தவிரப்
பொருள்
வேற்றுமை இல்லை. எந்தெந்தக் கோயில்களுக்கு எந்ததெந்தப்
பெயர் என்பதற்குச்
சிற்ப நூல்களில் விளக்கம் கூறப்படுகின்றன. ஆனால்,
திருநாவுக்கரசர் கூறுகிற
பெயர்களுக்கு விளக்கம் இப்போது தெரியாத
படியினாலே, அவை எந்ததெந்தக்
கோயிலின் பெயர்கள் என்பது
தெரியவில்லை. இதைக் கண்டறியவேண்டியது நமதுநாட்டுச் சிற்பக்
கலைஞர்களின் கடமையாகும். ஆயினும், நம்மால் இயன்ற அளவு
இதனை ஆராய்வோம்.
ஆலக்கோயில்
முதலில், ஆலக்கோயில் என்று திருநாவுக்கரசர் கூறிய
கோயிலை ஆராய்வோம்.
ஆலக்கோயில் என்பது ஆனைக்கோயில்
என்பதன் மரூஉ. சிலர் ஆலமரத்தினால கட்டப்பட்ட கோயில் என்று
கருதுகிறார்கள். இது தவறு. ஆலமரம்,
கட்டடம்
கட்டுவதற்கு ஏற்ற
உறுதியான மரம் அன்று. ஆலமரத்தினால் கட்டடம் கட்டும்
வழக்கம்
இல்லை. வேறு சிலர் ஆலமரத்தின்கீழ் அமைந்த கோயில் என்று
கருதுகிறார்கள்.
இதுவும் தவறு. ஆலக்கோயில் என்பது கோயிற் கட்டட
வகைகளில்
ஒன்றென்பது தெளிவானது. ஆலக்கோயிற் கட்டடம், மேலே
கூறியது போல
ஆனைக்கோயில் வடிவமாக இருக்கும். சிற்ப சாஸ்திரங்களில்
இக்கோயில் கஜபிருஷ்ட
விமானக் கோயில் என்றும், ஹஸ்திபிருஷ்ட
விமானக் கோயில் என்றும்
|