|
48 |
தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் |
ஹஸ்திபிருஷ்ட விமானக்
கோயில் என்றும் கூறப்படுகிறது. கஜம், ஹஸ்தி
என்னும் சொற்களுக்கு யானை என்பது பொருள்.
யானையின் முதுகு
போன்று இந்தக் கோயிலின் கூரை அமைந்திருப்பதனால் இதற்கு இப்பெயர்
ஏற்பட்டது.
தமிழிலே இது யானைக் கோயில் என்று வழங்கப்பட்டுப் பிறகு
ஆலக்கோயில் என்று
மருவிற்று. சுந்தரமூர்த்தி நாயனார் திருக்கச்சூர்
ஆலக்கோயிலைக் கூறுகிறார்.
திருவொற்றியூர், வடதிருமுல்லைவாயில்,
திருவேற்காடு
திருக்கழுக்குன்றத்துப் பக்தவத்சல ஈசுவரர் கோயில், திருவானைக்கா முதலியவை ஆலக்கோயில்
எனப்படும் கஜபிருஷ்டவிமானக் கோயில்கள் ஆகும். மகாபலிபுரத்துச் சகாதேவ ரதம் என்னும் கோயிலும் மூன்று நிலையுள்ள மாடக்கோயிலாக அமைந்த ஆலக் கோயிலாகும்.1

ஆலக்கோயில் (ஆனைக் கோயில்)
1. இதைப்பற்றி இந்நூலாசிரியர்
எழுதியுள்ள அண்மையில்
வெளியாகியிருக்கிற ‘ஆனைக்கோயில்’ என்னும் நூலில் விளக்கமாகக்
காணலாம்.
|