70 |
தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் |
ஆதிகாலத்தில் மரத்தினாலும்,
சுதையினாலும், பஞ்சலோகத்தினாலும் செய்து
அமைத்தார்கள். இப்போதுங் கூட மரத்தினாலும்
சுதையினாலும்
செய்யப்பட்ட தெய்வ உருவங்கள் சில கோயில்களில் உள்ளன. உதாரணமாக,
உத்தரமேரூர் சுந்தர வரதப் பெருமாள் கோயிலிலுள்ள தெய்வ உருவங்கள்
மரத்தினால் செய்யப்பட்டவையே. திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்
பெருமாள்,
காஞ்சி பாண்டவ தூதப் பெருமாள்,மகாபலிபுரத்துத் தலசயனப்
பெருமாள், திருவிடந்தை
வராகப் பெருமாள் முதலிய
கோயில்களில உள்ள உருவங்கள் சுதையினால்
ஆனவையே.
கருங்கல்லினாலும் பஞ்சலோகத்தினாலும்
சிற்ப உருவங்கள்
உண்டாக்கப்பட்டது கி. பி. 7ஆம் நூற்றாண்டிலே
ஆகும். பல்லவ அரசரும்
பிற்காலச் சோழரும் இவற்றினால் சிற்பங்களை அமைத்தார்கள்.
சிவன், திருமால் முதலிய தெய்வ
உருவங்கள் மனித உருவமாகக்
கற்பிக்கப்பட்டு, மனித உருவம் போலவே செய்யப்படுகின்றன.
ஆனால்,
அந்த உருவங்கள் எலும்பு, சதை, நரம்பு முதலியவை அமைந்த,
மானிட
உறுப்புள்ள1 தெய்வ உருவங்களாக அமைக்கப்படுவதில்லை.
யவன நாட்டுச் சிற்பமும்
நமது நாட்டுச் சிற்பமும்
அயல் நாட்டுத் தெய்வச்
சிற்ப உருவங்களுக்கும் நமது நாட்டுத்
தெய்வச் சிற்ப உருவங்களுக்கும் உள்ள வேற்றுமைகளை இந்நூலாசிரியர்
எழுதியுள்ள ‘‘இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்’’ என்னும்
நூலில்
எழுதியிருப்பதை இங்குக் கூறுவது பொருந்தும். அது:
‘‘அயல்நாட்டுச் சிற்பங்கள்,
உருவங்கள் உள்ளது உள்ளவாறே,
கண்ணுக்குத் தோன்றுகிறபடியே
1. Anotomy
|