72 |
தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் |
எங்கேயோ இழுத்துச் சென்று ஏதேனும்
உணர்ச்சிகளையும் கருத்துகளையும்
ஊட்டுகின்றன. ஆகவே, நமது சிற்பங்கள், அயல் நாட்டுச்
சிற்பங்களைப்
போன்று, வெறும் அழகிய காட்சிப் பொருள்களாக மட்டும் இல்லாமல்,
காட்சிக்கும் அப்பால் சென்று கருத்துகளையும் உணர்ச்சிகளையும்
ஊட்டுகின்றன.
இந்த இயல்பு சிற்பக் கலைக்கு மட்டுமன்று; நமது நாட்டு
ஓவியக் கலைக்கும் பொருந்தும்.
‘‘எனவே, பொருள்களின் இயற்கை
உருவத்தை அப்படியே
காட்டுவது அயல் நாட்டுச் சிற்பக் கலையின் நோக்கம்;
உணர்ச்சிகளையும்
கருத்துகளையும் உருவங்கள் மூலமாக வெளிப்படுத்துவது நமது நாட்டுச்
சிற்பக் கலையின் நோக்கம் என்னும் உண்மையை மறவாமல் மனத்திற்
கொள்ளவேண்டும்.’’1
சிற்பத்தில் மறைபொருள்கள்
நமது தெய்வத் திருவுருவங்கள்
குறிப்புப் பொருளைப்
புலப்படுத்துகின்றவை. (குறிப்புப்பொருள் - Symbolism.) அதாவது,
மறைபொருளாகக் கருத்துகளை வெளிப்படுத்துகின்றவை. உதாரணமாக
ஒன்றைக் காட்டுவோம்.
கடவுள் எங்கும் பரந்து
இருக்கிறார் என்பது எல்லாச்
சமயத்தவரின் கொள்கை.உருவம் இல்லாமல் பரந்து இருக்கிற
கடவுளைச்
சைவரும் வைணவரும் தமது கடவுள் திருவுருவத்தில் மறைபொருளாக
அமைத்துக்
காட்டியிருக்கிறார்கள். அவர்கள் கடவுள் உருவங்களுக்கு நான்கு
கைகள் அல்லது
எட்டுக் கைகளை அமைத்துக் காட்டியிருக்கிறார்கள்.
திசைகளை
நான்காகவும் எட்டாகவும் கூறுவது மரபு. ஆகையினாலே,
எல்லாத் திசைகளிலும் பரந்து
1,‘‘இறைவன் ஆடிய
எழுவகைத் தாண்டவம்’’ ; பக்கம் 14. 15-மயிலை சீனி. வேங்கடசாமி எழுதியது.
|