இருக்கிறவர் கடவுள் என்பதைக் காட்ட, நான்கு கைகளை அல்லது எட்டுக்
கைகளைக்
கற்பித்திருக்கிறார்கள். இவ்வாறே, கடவுளின் மற்றக்
குணங்களுக்கும் குறிப்புப்
பொருளைக்
கற்பித்துத் தெய்வ உருவங்களை
அமைத்திருக்கிறார்கள். இக்குறிப்புப்
பொருள்களை
யெல்லாம் விளக்கிக்
கூறுவதற்கு இது இடமன்று; காமிகாகமம் முதலிய
நூல்களில் கண்டு
கொள்க; இந்நூலாசிரியர் எழுதியுள்ள ‘‘இறைவன் ஆடிய எழுவகைத்
தாண்டவம்’’ என்னும் நூலிலும் கண்டு கொள்க.
பண்டைக் காலத்திலே தமிழர் கோயில்களிலே தெய்வத்தை
வழிபட்டபோது,
இப்போது வைத்து வணங்கப்படுகிற தெய்வ உருவங்களை
வைத்து வணங்கவில்லை.அந்தந்தத் தெய்வங்களின் அடையாளங்களை
மட்டும் வைத்து வணங்கினார்கள்.
உதாரணமாக முருகனை வணங்கிய
தமிழர், இப்போது வணங்கப்படுகிற முருகன்
உருவத்தை வைத்து
வணங்காமல், முருகனுடைய படையாகிய வேலை மட்டும் வைத்து
வணங்கினார்கள்; இந்திரனுடைய
உருவத்தை வைத்து வணங்காமல்
அவனுடைய
வச்சிராயுதத்தை வைத்து வணங்கினார்கள்; அல்லது அவனது
வெள்ளை யானை,
கற்பகத் தரு இவற்றின் உருவங்களை வைத்து
வணங்கினார்கள். இதைத்தான்
வேற்கோட்டம், வச்சிரக் கோட்டம்,
அமரர்தருக் கோட்டம், வெள்ளை யானைக் கோட்டம்
என்று சிலப்பதிகாரம்
கூறுகிறது.
இதனால் அறியப்படுவது என்னவென்றால், இப்போது கோயில்களில் வைத்து
வணங்கப்படும் தெய்வ உருவங்கள் பண்டைக் காலத்தில் சிற்ப உருவங்களாக
அமைக்கப்படவில்லை என்பதும், அவை பிற்காலத்தில் அமைக்கப்பட்டவை என்பதும்
ஆகும்.
|