பக்கம் எண் :

ஓவ

ஓவியக் கலை

99


 

தஞ்சாவூர்ப் பெரிய கோயில் ஓவியங்கள் முதலியவை. இவற்றை
ஒவ்வொன்றாக விளக்குவோம்.
 

சித்தன்னவாசல் ஓவியம்

 

அன்னவாசல் என்னும் பெயருள்ள ஊர்கள் புதுக்கோட்டையில் சில
உள்ளன. அப்பெயருள்ள ஊர்களில் சித்தன்னவாசல் என்பதும் ஒன்று. இது
புதுக்கோட்டைக்கு வடமேற்கே பத்து மைலுக்கப்பால் இருக்கிறது.
இக்கிராமத்துக்கு அருகிலே மலையின் மேலே சிறுகுகைக்கோயில் ஒன்று
உண்டு. இது ஜைன சமயக் கோயில். இக்கோயிலை அமைத்தவன் பல்லவ
அரசனாகிய முதலாம் மகேந்திரவர்மன் (கி.பி.600-630) ஆவன்.1
இந்த அரசன் இசைக்கலை, நாடகக் கலை, சிற்பக் கலை முதலிய கலைகளில்
வல்லவன்; அன்றியும், சித்திரக்கலையிலும் வல்லவன். இதனால் இவனுக்குச்
சேதகாரி, சங்கீர்ண ஜாதி, சித்திரகாரப் புலி முதலிய சிறப்புப் பெயர்கள்
உண்டு. இந்த அரசன், தக்ஷிண சித்திரம் என்னும் பழைய ஓவிய நூலுக்கு
உரை எழுதினான் என்று இவன் அமைத்த மாமண்டூர் குகைக்கோயில்

சாசனம் கூறுகிறது என்பர்.

 

இவன் உண்டாக்கிய சித்தன்னவாசல் குகைக் கோயிலிலே, இவன்
காலத்தில் எழுதப்பட்ட சுவர் ஓவியங்கள் சில காணப்படுகின்றன.
இவ்வோவியங்கள் காலப்பழைமையினாலும், மாட்டுக்காரப் பயல்களின்
அட்டூழியத்தினாலும், இங்கு வந்து தங்கியிருந்த மனிதர்களின்
கவலையின்மையினாலும் பெரிதும் அழிந்துவிட்ட போதிலும்,

இப்போதும் குற்றுயிராகக் காணப்படுகின்றன. இப்போது இவ்வோவியங்கள்
ஒளி மழுங்கிக்

 


1. இவ்வரசன் வரலாற்றைப் பற்றியும், சித்தன்ன வாசல் ஓவியங்கள் பற்றியும்
இந்நூலாசிரியர் எழுதியுள்ள ‘‘மகேந்திரவர்மன்’’ என்னும் நூலில் காண்க.