பக்கம் எண் :

98
98

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்


 

தென்னிந்திய ஓவியம்

 

     தென் இந்திய சித்திரங்கள் பண்டைக் காலத்தில் சிறப்புற்றிருந்தன.
ஹைதராபாத்து இராச்சியத்தின் வடகோடியில் பரத்பூருக்கு அருகில் உள்ள
அஜந்தா மலைக்குகை ஓவியங்களும், காஞ்சி கயிலாசநாதர் கோயில்
ஓவியங்களும், பனைமலைக் கோயில் ஓவியங்களும், புதுக்கோட்டை
இராச்சியத்தின் சித்தன்னவாசல் குகைக் கோயில் ஓவியங்களும்,
திருமலைபுரம் மலையடிப்பட்டி ஓவியங்களும், தஞ்சைப் பெருவுடையார்
கோயில் ஓவியங்களும், இலங்கை சிகிரியா மலைச்சுவர் ஓவியங்களும்
தென்னிந்திய ஓவிய மரபைச் சேர்ந்தவை.

 

     நமது நாட்டிலே இப்போதுள்ள சுவர்ச் சித்திரங்கள் மிகச் சிலவே.
ஏனென்றால், கி.பி.600-க்கு முன்னர் இருந்த கோயிற் கட்டடங்கள் எல்லாம்
செங்கல், சுண்ணாம்புகளினால் கட்டப்பட்டவை. ஆகவே, அக்கட்டடங்கள்
விரைவில் அழிந்துவிட்டன.  அக்கட்டடங்களோடு சுவர்ச் சித்திரங்களும்
அழிந்து விட்டன. கி.பி. 600-க்குப்பின் உண்டான குகைக்கோயில்கள்,
சுற்றளிகள் என்னும் கட்டடங்களில் எழுதப்பட்ட ஓவியங்களில்

பெரும்பான்மையும் இப்போது அழிந்துவிட்டன. ஏனென்றால்,
நுண்கலைகளில் மிக எளிதாகவும் விரைவாகவும் அழிந்துவிடக்கூடியது
ஓவியக் கலை. ஆகவே, அவை, பராமரிப்புக் குறைவு காரணமாகவும்,
காலப்பழைமை காரணமாகவும் அழிந்துவிட்டன.

 

    தமிழ்நாட்டிலே இப்போதுள்ள மிகப் பழைய ஓவியம் சித்தன்னவாசல்
குகைக்கோயில் ஓவியமே. அதற்கடுத்த படியாக உள்ளவை காஞ்சி
கயிலாசநாதர் கோயில் சுவர் ஓவியங்களும், பனைமலைக் கோயில்
ஓவியங்களுமாம். இவை சிதைந்து அழிந்துள்ளன.
அதற்குப் பிற்பட்டவை