பக்கம் எண் :

அகத்திணை ஆராய்ச்சி15

மறுபெயராய் நிற்றல் காண்க. ஒரு மொழியின் பெயர் அம்மொழி
பெற்றிருக்கும் இலக்கியப் பல்வகையுள் ஒருவகை இலக்கியத்திற்கு மட்டும்
பெயராய்ச் சிறப்பித்து ஆட்சி செய்யப்படுமானால், அவ்விலக்கியவகை
அம்மொழியிலல்லது பிற எம்மொழியிலும் காண்பதற்கில்லை என்பதுதானே
கருத்துரை. இதனால் உலக மொழிகளுள் தமிழ்மொழியின் ஒரு தனிச்சிறப்பும்,
தமிழிலக்கிய வளத்துள் அகத்திணையின் முதற்சிறப்பும் விளங்கித் தோன்றும்.


     தள்ளாப் பொருளியல்பிற் றண்டமிழாய் வந்திலார்
     கொள்ளாரிக் குன்று பயன்                (பரிபா:9)


     ‘தள்ள வாராக் காதற் பொருளின் இலக்கணம் கூறும் தமிழை
ஆராயாதவரே, மலையிடத்து நிகழும் களவொழுக்கத்தை ஓர் ஒழுக்கமென
ஏற்றுக்கொள்ளார்’ என்று குன்றம் பூதனார் காரணம் கூறிக் கழறுவர். பிற
மொழிகள் எழுத்திலக்கணமும் சொல்லிலக்கணமும் உடையனவே யன்றி,
மக்களின் வாழ்வை ஆராய்ந்த பொருளிலக்கணம் கண்டவையல்ல. தமிழ்
மொழியோ


     எனின், முவ்விலக்கணமும் நிறைந்தது. தமிழின் பொருளிலக்கணத்தைக்
கல்லாத அறிவுக் குறையுடையார் காதற் களவைக் குறைகூறுவர் எனவும்,
தமிழை ஆய்ந்தவர் களவு நெறியை உடன்படுவர் காண் எனவும் மேலைப்
பரிபாட்டல் தெளிகின்றோம். தமிழின் தன்னேரின்மைக்கு அகப்பொருள்
இலக்கணம் கண்டது காரணமாம் என்பது மேலும் வலியுறும்.
பாண்டிநாடு
பன்னீராண்டுப் பஞ்சம் நீங்கிச் செழித்த பின், பாண்டியன் தமிழ்ப்
புலவர்களைத் தேடிக் கூட்டிவரச் செய்தனன் என்றும், எழுத்ததிகாரமும்
சொல்லதிகாரமும் வல்ல புலவர்களே நாட்டிற் காணப்பட்டனர்;
பொருளதிகாரம் வல்ல புலவர் யாரும் காணப்பட்டிலர் என்றும், அது கேட்ட
பாண்டியன், “என்னை! எழுத்தும் சொல்லும் ஆராய்வது பொருளதிகாரத்தின்
பொருட்டன்றே! பொருளதிகாரம் பெறேம் எனின், இவை பெற்றும்
பெற்றிலேம்” எனக் கவன்றான் என்றும், இறையனார் அகப்பொருளுரையில்
ஒரு வரலாற்றுக் கதை வருகின்றது. பின் நடந்தது என்ன? ஆலவாய்ப்
பெருமான் அருளால், அறுபது சூத்திரம் கொண்ட அகப்பொருள் நூலைப்
பெற்றான் பாண்டியன் எனவும், “இது பொருளதிகாரம்” என்று மகிழ்ந்து உரை
வகுப்பித்தான் எனவும் அறிகின்றோம். பொருளதிகாரம் கிடைக்கவிலைலையே
என்று வருந்திய வேந்தனுக்குத் தொல்காப்பியம் போல முழுப்
பொருளதிகாரத்தை இறையனார் அருளிச் செய்யாததையும், அகப்பொருள்
நூல் பெற்ற வேந்தன் தானும், “புறப்பொருள் நூலும் கிடைத்திருப்பின் என்
மகிழ்ச்சி பெரிதாயிருக்கும்; இறைவன் இவ்வருளுக்குப் போற்றி” என்று ஓர்
அமைதிக் குறிப்பேனும் சொல்லியிருக்கலாம்; அங்ஙனம்