பக்கம் எண் :

174

                4. அகத்திணைக் குறிக்கோள்

     அகத்திணை இலக்கண இலக்கியம் பற்றிய பேருண்மைகளையும்
பெரும்
சிக்கல்களையும் இனி ஆராய்வோம். அகத்திணையின் பொருட்
பாகுபாடுகளையும் தோற்றக் காரணங்களையும் முன்னியல்களில் விரிவாக
விளங்கிக் கொண்டீர்கள். இவ் விளக்கத்திற்குப் பின்னரே, சிக்கறுப்பதும்,
உண்மை காண்பதும் நமக்கு எளிதாக இருக்கும். அகத்திணை, கைக்கிளை,
பெருந்திணை என்ற குறியீடுகளுக்குப் பொருள் என்ன? இதன் விடை ஒரு
சிக்கல். தொல்காப்பியத்தில் கைக்கிளை, பெருந்திணைகட்குத் தனி
நூற்பாக்கள் உள. இப்பாக்கட்கு வரைந்த உரையும் விளக்கமும் எல்லாம்
முற்றும் பிழை. இப் பிழைபாடு உரையாசிரியர்கள் காலமுதல் எழுத்து
வழக்கில் ஏறி நிலைபெற்றுவிட்டது. இப்பிழையான உரையே
பன்னூற்றாண்டுகளாக வழக்கில் இருக்கும் மரபான உரையாகும். மாற்றி
நினைக்கவோ மறுக்கநினையவோ உண்மை காணவோ முயன்றாரிலர்.
இவ்வுரைக் கருத்து அகத்திணை இலக்கணத்திற்கு அடிமுரண் என்று
சிந்தித்தாரிலர். ஏன்? அகத்திணையின் இலக்கணந்தானும் ஒரு சிக்கல்.


     ஒன்றினது உண்மை ஐயந்திரிபறப் புலனாகிவிட்டால் அதன்
கடைப்பிடியில் பிறவற்றைத் தெரிந்து தெளியலாம். அகத்திணைக்கு வரைந்த
உரைகளும் பல. தொல்காப்பியத்திற்குப் பின் தோன்றிய