பக்கம் எண் :

அகத்திணைப் பாட்டு269

                  6. அகத்திணைப் புலவர்கள்

     சங்கப் புலவர்கள், சங்கப்பாட்டுக்கள் பற்றிச் சில வகைபாடுகளை
முதலிற் குறிப்போம். 2381 சங்கப்பாக்களை 473 சான்றோர் பாடினர்.
இப்பாக்கள் அகத்திணையும் புறத்திணையும் பற்றியவை. இவற்றுள்
அகத்திற்கே உரிய செய்யுட்கள் 1862. இவை தம்மை இயற்றியோர் 378
அகப்புலவோர். இவருள் பெண் புலவோர் இருபத்து மூவர். அவர் பாடிய
அகங்கள் 97.


     சங்கத்தொகையின் 473 புலமையோருள், அகம் பாடாது புறமே
பாடியவர் தொகை 95 (ஆண் 86; பெண் 9); புறம்பாடாது அகமே பாடியவர்
எண் 301: அகமும் புறமும் பாடிய இருதிணைப்புலவோர் எண்ணிக்கை 71.
அகத்திணையிற் கற்பியல் பாடாது களவியல் மட்டும் பாடியோர் தொகை 145;
களவியல் பாடாது கற்பியல் ஒன்றே பாடியவர் எண் 140; களவும் கற்பும்
பாடிய இரு கைகோட் புலவர் எண்ணிக்கை 93.


                    அகப்பாடலின் பாகுபாடு

 

     திணை           பாக்கள்       புலவர்கள்
     ஐந்திணை

     களவு 882          238        41 களவுப் பாடல்களுக்கும்

                1848
     கற்பு  966          238        28 கற்புப் பாடல்களுக்கும்
                                     ஆசிரியர் பெயர்கள் இல.