பக்கம் எண் :

30தமிழ்க்காதல்

                              VI

     அகத்திணை பற்றிய என் ஆய்வுரை புதுக்கூறுகள் கொண்டது என்று
சொல்லிக் கொள்ள என் உள்ளம் விழைந்து நாணுகின்றது. அகத்துறைகள்
முறையாகவும் முழுமையாகவும் இந்நூலில் ஆயப்பட்டுள. பொருளை
வகுத்துக்கொண்ட பகுப்பும், நோக்கிய நோக்கும், காட்டிய சான்றுகளும்,
செய்த விளக்கங்களும், கொண்ட முடிபுமெல்லாம் தமிழின மேல்வளர்ச்சிக்குப்
புதிய ஊக்கந்தரும் முயற்சிகள் என்று கற்பவர் கருத்திற் படுமாயின் என்
உள்ளம் உள்ளுள் உவக்கும். ஆன்லிச்சு என்னும் அறிஞன் ‘பண்டைக்
கிரேக்க நாட்டின் பால்வாழ்க்கை’ எனப்பெயரிய நூலின் முன்னுரையில்
எழுதிய கருத்து பழந் தமிழகம் கண்ட அகத்திணையை ஆராயும் என்
கருத்துக்குப் படியெடுத்தது போல இருப்பக் கண்டு வியந்தேன்.
முன்னுரையனைய இம் முதலாவது இயலைப் படித்து முடிக்கும் நீவிர், தம்
முன்னுரை முடிவில் ஆன்லிச்சு வரைந்த நோக்கைப் படிமின்:-


     “இம் முன்னுரையைப் படித்த நீங்கள் புலனின்பம் பற்றிய
     கிரேக்கக்கோட்பாட்டை வேண்டுமளவு அறிந்தீர்கள். இக் கண் கொண்டு
     இனிவரும் இயல்களில் கிரேக்க நாகரிகப் பண்பின் சிறந்த கூறுகளை
     அறிந்து கொள்வீர்கள். இந்நூலைக் கற்றபின், ஓரினத்தின் உறவைப்
     பெறுவீர்கள். அவ்வினம் பிற மக்களினம் போலாது, இன்பத்தை
     வாழ்க்கையின் அடிப்படையாகக் கொண்டது; அவ் வின்பத்தை உயர்ந்த
     அறங்களோடு தழுவிக்கொண்ட அறிவுடையது; அதனால் பண்பட்ட

     வாழ்க்கையை ஞாலத்துக்குப் பரப்பியது; அவ்வினம் மனிதவினம் உள்ள
     எல்லாக் காலத்தும் பாராட்டத்தக்கது என்று கண்டு கொள்வீர்கள்’1

 ____________________________________________________
     1. The reader will now have learnt enough of the Greek gospel
of hedone(sensual pleasure) to be able to consider in following
chapters the most important manifestations of Greek culture form
this point of view. He will then make the acquaintance of a people
which certainly like no other, make sensuality the basis of life, but
which knew also how to combine this sensuality with higher ethics
and thereby created a culture of life which mankind will admire until
the end of all time.

                   - Hans Licht: Sexual Life in ancient Greece