மணியார் குழவி போலத் தோயும் திரைகள் அலைப்பத் தோடார் கமலப் பள்ளி மேய வகையில் துஞ்சும் வெள்ளை அன்னம் காண்மின்”. என்று பாடினார் சிந்தாமணி ஆசிரியர். அன்பார்ந்த குழவியை அழகிய மஞ்சத்திலமைத்து அதன் மேனியைக் கைகளால் தடவித் துயில்விக்கும் அன்னைபோல் ஈரம் வாய்ந்த பொய்கை கமலப்பள்ளியில் அமர்ந்த அன்னத்தைத் தன் அலைக்கைகளால் தட்டித் துயில்வித்ததென்று கவி அமைத்துள்ள உவமை சால அழகியதாகும். தண்மை வாய்ந்த பொய்கை. தலையாய அன்பு வாய்ந்த அன்னையை ஒத்தது. மெல்லிய திரைகள் அன்னையின் மெல்லிய கரங்களை ஒத்தன. அத்திரைகள் தோய்தலால் அன்னம் அடைந்த இன்பம். அன்னையின் கை தோய்தலால் அருங்குழவியடையும் இன்பத்தை நிகர்த்தது. அன்னம் துயிலுதற்கமைந்த நறுமணங்கமழும் கமலப்பள்ளி மெல்லிய வெண்பட்டு விரித்த விழுமிய மஞ்சம் போன்றது என்று கவிஞர் எழுதியமைத்த ஓவியம் கற்போர் மனத்தைக் கவர்வதாகும். இத் தகைய பொய்கையில் நீலத் துகிலுடுத்த ஒரு மங்கை நீராடச் சென்றாள். அவ் வழகிய ஆடையில் குயிற்றிய செம்மை சான்ற மணிகளிலே கதிரவன் ஒளி வீசிய அம் மணிகளினின்று எழுந்த நிழற் சுடர்கள் பொய்கையின் மீது விழுந்து நெருங்கிப் பூத்த செந்தாமரையை நிகர்த்தன. அச்சுடர்களைச் சேய்மை |