பக்கம் எண் :

காவிய இன்பம்101

யிலிருந்து     கண்ட  மட  அன்னம்  ஒன்று  விரைந்தோடிச்  சென்று
ஆர்வத்தாற்   கவ்விற்று.   மணிகளின்    நிழலாய்  சுடர்கள்  வாயில்
அகப்படாமையால்  தன்   மடமையை   நினைந்து  நாணிய  அன்னம்,
வந்த  வழியே   வெட்கமுற்று   விரைந்து சென்றது. இத் தகைய இனிய
இயற்கைக் காட்சியை,

நீலத் துகிலிற் கிடந்த
   நிழலார் தழலம் மணிகள்
கோலச் சுடர்விட் டுமிழக்
   குமரி அன்னம் குறுகிச்

சால நெருங்கிப் பூத்த

   தடந்தா மரைப்பூ வென்ன
வாலிச் சுடர்கள் கவ்வி
   அழுங்கும் வண்ணம் காண்மின்”

என்று கவிஞர் நயம்படப் பாடினார்.  

நீலத்     துகிலின் இடையே  இலங்கிய  செம்மணிகள் பசுமையான
தாமரை   இலைகளின்    நடுவே   விளங்கிய  செங்கமல  மலர்போல்
திகழ்ந்தன.    நீராடப்     போந்த     மங்கையின்   நீலப்புடவையில்
செம்மணிகள்  நெருக்கமாகப்  பதிந்திருந்தமையால்,  கதிரவன்  ஒளியில்
அவற்றின் நிழல்கள்,  நீர்ப்பரப்பில்  நெருங்கி  விழுந்து சால நெருங்கிப்
பூத்த   செந்தாமரையை    நிகர்த்தன.    நாள்  தோறும்  நற்றாமரைக்
குளத்தில் வாழ்ந்து, செங்கமல  மலர்களைச்  செவ்வையாக அறிந்திருந்த
அன்னமே,     செம்மணியின்     சுடர்களைச்   செந்தாமரை   என்று
மயங்கிற்றென்றால்,    அம்மணிகளின்     செம்மை     சான்ற   ஒளி,
சொல்லாமலே    விளங்குமன்றோ?   அச்சுடர்களைத்  தாமரை  என்று
கருதி  அன்னம்  விரைந்து  சென்று  கவ்விய  ஆர்வமும், அச்சுடர்கள்
வாயிலாகப்படாமை