பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 126

             3

ஓங்கு திரைப் பெருங்கட லுலகத்துமாந்தர்
வீங்குமுலை வருத்திடை மகளிரை மருவுவார்
இலங்குஞ் சோளிசேலை குழல் தமைக் கண்டதும்
மனங்கொடா ரோரிழி அலியிட மன்றோ?
சிறப்பான யாப்பிட்ட பனுவ லென்னும்
விரகஞ்சேர் வானின் மங்கை யிருக்க
யாப்பற்ற புதுக்கவிதையை யெப்படி
கைப்பற்ற துணிந்தா ரைம்புல னொப்பி?
யாப்புடைத்த கவிதை
அணையுடைத்த காவிரி
முகிலுடைத்த மாமழை
முறட்டுத் தோலுரித்த பலாச்சுளை
வறட்டுக் கோஷா எறிந்த மங்கை.
யாப்பற்ற கவிதை
அருவருக்கும் அலியல்ல;
மார்கழியின் மொட்டிரவில்
தென்றல் தரும் சூடுபோக்க
வெண்ணிலவின் பயன்துய்க்க;
உடை கலைந்த ஒரு தலைவி
இயற்கையெழில் கொட்டியிருக்க
செயற்கை யணி வேண்டாமென்று
ஒப்பனையை நீக்கிவிட்ட
வனப்பொளிர் கனவுப் பெண்;
கால் குழலாக எல்லாம் கவர்ந்து எழில் கனிய வீங்கி
ஈர்க்கிடை போகலாகா எதிரெதிர் பணைந்து வீங்கும்
வார்க்குலம் அறுந்த கொம்பை வரிமுலை
ஐயா இது.

        4

அன்று மனிக்கதவை
தாயர் அடைப்பவும்
மகளிர் திறப்பவும்
செய்தார் மாறி மாறி;
என்றும்
புலவர் அடைப்ப
கவிஞர் திறப்பார்.

   
     சி. மணி சிறியசிறிய -ஆயினும் நயங்கள் நிறைந்த- கவிதைகள் அநேகம்
எழுதுயிருக்கிறார். 1963 -64 வருடங்களில். எடுத்துக்காட்டாக ஒன்றைக் குறிப்பிடலாம்.