அதே நிலவை சு.சங்கரசுப்ரமண்யன் வேறுவிதமாகப் பார்க்கிறார். (எ.69) |
| அவளோ சினிமாக்காரி உருவம் காட்டி ஊரை மயக்க ஒளி பாய்ச்சி குளோசப்பில் நிறுத்துகிறார் யாரோ. அப்படியே இருந்து விட்டாலோ முகப்பருவும் மேக்கப்பை மீறிவிடும். எனவே தான் ஒளி குறைந்தது நிழல் பூசி ஒளிக்கின்றார் காமிரா வேலைக்கு காரிகையா வெறுப்பு! |
| |
சி. மணியின் ‘கவிதை நினைவுகள்’ குறிப்பிடப் பெறவேண்டிய மற்றொரு அருமையான கவிதை. பரிகாசமும், சிந்திக்க வைக்கும் கருத்தாழமும் கொண்ட படைப்பு; 4 பகுதிகள் கொண்டது. (எ.61) |
| இருக்கின்ற பாலோ இருவருக்குத்தான் அளவோ குறையாது மூவர் அருந்த வேண்டுமென்றால் நீரைக் கொட்டி சரிக்கட்டுவாள். பாலின் சுவை கெடுப்பாள் அளவைப் பற்றிய கவலை இல்லையென்றால் நல்ல பாலைத் தருவாள். |
2வது பகுதியில், ‘மரபின் தூய பருத்திச் சட்டை, கவர்ச்சியான தோற்றத்துடன், களிப்பூட்டும் பலவண்ணங்களிலும் கண்கவரும் பலவகைகளிலும் கிடைக்கும்-நம்பிக்கையான பெருங்கடைகளில் என்பதனால் பலரும் ‘அளவெடுத்து’ சட்டையையே வாங்கினர். சிலருக்கு அது அமைந்தது. சிலருக்குப் பொருந்தவில்லை. அநேகருக்கு எப்படி எப்படியோ இருந்தது என்றாலும் மரபு முத்திரையில் மயங்கி அதை வாங்குவதிலே பலரும் ஆர்வமாக இருந்தார்கள். சிலர் மட்டும் அது சரியாக இல்லையெனத் தெரிந்ததும், வேண்டிய துணியை வாங்கிக் கொண்டுபோய். ‘உடலுக்குத் தக்கபடி, தைத்தார் சட்டை.’ |