பக்கம் எண் :

135  வல்லிக்கண்ணன்

  சொல்லும்
எட்மண்ட் வில்சன்
நீர் சொல்லும்
கனிவாய்.
சொல்லும்
மிஸ்டர் பிரிச்செட்
நீர் சொல்லும்
தயை கூர்ந்து
ஸாத்ரேக்கு
எக்ஸிஸ்
டென்ஷியாலிஸம்
காமுவுக்கு
இன்னொன்று
பின்னால்
வேறொன்று;
காமுவின் விதவைக்கு
மற்றொன்று;
பிறிதொன்று
அவள் அருமைப்
பாட்டிக்கு
கரடிக்குக் கம்யூனிஸம்
டாலர் ஹீமனிஸம்
பீக்கிங்குக்கு
என்ன?
சொல்லும்
எ.ஐ. பூரே
மிக விரைவாய்.
நாம் எல்லாம்
டமில் எழுத்தாளர்,
நமக்கோ
ப்ளேஜியாரிஸம்,
 
     இன்றைய பக்தர்களின் போக்கையும் பக்தியின் தன்மையையும் கிண்டல் செய்து
சுந்தர ராமசாமி ‘மந்தரம்’ என்ற சுவாரஸ்யமான கவிதையை எழுதினார்-
 
  ட்யூப் லைட் சுந்தராச்சி உபயம்
குத்துவிளக்கு கோமுட்டிச் செட்டி உபயம்
உண்டியல் பெட்டி தெ.கு.வே. உபயம்
பஞ்சதிரி விளக்கு ஆண்டி நாடார் உபயம்
குண்டுச் சட்டி பால்பாயச உருளி த்ரிவிக்ரமன் நாயர் உபயம்