| அவள் தழுவிய மதங்கள் அவள் ஆக்கிய கலைகள் இத்தனையும் பொய்யாத புகழ்க்கதை ஆனால்- கலை, கணிதம், கலாச்சாரப் பணி, வேதம், சோதிடம், போதசன் மார்க்கம், கோபுரம், மந்திரம் கோர்த்து நின்ற மதங்கள், யானை, அரசு, இடையிடைப் பூசல்கள், மனம் வளர்த்த உழைப்பு, உழைப்பு மீறிப் பொன், பொருள், காலத்தை நீட்டிக் கருத்தை உள்ளிழுத்து ஞானமே யாவும் அஹம் பிரும்மாஸ்மி தர்மம் சரணம் கச்சாமி என்று மேளந்தட்டிப் பாடி புறநோக்கு விலகிப் போச்சு. முன்னூற்றுக்கு முன் விஞ்ஞானம், லௌகீக வியாபாரம் பொல்லாத தொழில் நுட்பம், கள்ளமுகம் யந்திரப் பூட்டம், தந்திரப் பேச்சு என்றேதும் தெரியாத பாமரமாய் களித்திருந்தோம் பிறவியினால். திரை கடலோடி திரவியம் தேடி வந்தோரின் நிறப் பகட்டுக்கு நாட்டைக் கைகழுவி, நெறியைப் பங்கிட்டு நாமும் நிறம் மாறி துரை வாழ்வில் வழுக்கி விழுந்தோம் அடிமைப் புதையில், புதையிருளில் மோகமுற்று மகுடி முன் பாம்பாகி தாய் சொல் தாழ்வென்ற நினைப்பில் வேடிக்கை யந்திரங்கள், மில்துணிகள் குல்லாய்கள், காலுறைகள், நீளக்கைப் பழக்கங்கள் நிரம்பி வழிந்து நிலத்தைக் குழப்பின. இருந்தும் நெறிகெட்ட புயல் மறைந்து நிலையான விளக்கேற்ற நரி, புரி விரட்டி நாமிங்கு கொடிகட்ட புரிந்த தியாகம், தவம். வாழ் வெரிய குலம் கலங்க சத்தியத் தீக்குளித்து | | |
|
|