பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 140

  கீதை-ராட்டை கவசம் கட்டி
புறம் வெந்து பட்டும்
அகம் நொந்து போகாது
அகிம்சையாலே தாவை மீட்ட கதை
வீரக் கதையா-காந்தியின் கீதைக் கலையா?
ஆனாலும்,
வெற்றியிலோர் மறு.
அன்னையின்
பனிகமழ் கூந்தலில்
ஒரு குடங்கை பிய்தல்.
இழி மயிரது கருகிக் குமைந்து
தாயின் தனிப்பண்பு சோதனைக் குள்ளாச்சு.
விஞ்ஞான நீர்தேக்கி, தொழிற் கப்பல் ஓட்டி
அகவாழ்வும் புறநோக்கும், சகவாழ்வும்
குடியரசால் ஆக்கி வரும் காலை
தேரை நிமிர்த்திவிட்டு தெருவுக்குள் இழுக்கும் வேளை
வடமுனை ‘டிராகன்’ தீ மூச்சு தற்ற
நெஞ்சு நீட்டி மண்காக்க காவு கொடுத்தோம் அன்று.
இன்றோ திரண்ட நிலவை விழுங்க வரும் பாம்பாய்
வடமேற்கு பாக் கபடமாய் ஊர்ந்து வர
காவு கொடுத்தலினும் காவு கொடுக்க
வைத்தோம்.
பாம்பு பின் ஊர சுவடு பற்றி
புற்று நோக்கி சென்றோம்.
நாடு என் உயிர்
நாடு என் நிழல்
நாடு என் உடல்
இன்று நாம் எழுப்பும் புதுக்குரல்கள்.
நேரில் காணும் நிஜ உணர்வுகள்.
காலத்தில் ஊற்றெடுத்த வீரமும்
வீரத்தால் சிந்தி விட்ட ரத்தமும்
வீணல்ல; ஆதர்மம் மாய்க்க மண்ணில்
கண்ணன் நிகழ்த்திய காவியமும்
கால மலைப்புதரில் ஓடித்திரிந்து
உடலை இரும்பாக்கி
பெற்ற வீரப் போர் முறைகளும்
வெற்றிக்குத் துணையாச்சு,
இனி...

(எழுத்து 84-1965)

     அறுபதுகளின் பாரதப் போரை புராதன பாரதப் போருடன் உவமித்து
சு.சங்கரசுப்ரமண்யன் ‘பாரதப்போர்