என்ற கவிதையை எழுதியுள்ளார். ரசிக்கப்பட வேண்டிய ஒரு படைப்பேயாகும் அது. |
| பொய்ப்புழுதி கிளப்பி பாவக்குருதி சிந்தி தன்வினை தின்னும் பகைக் கூத்து தாய்மடி அறுக்கும் தறுதலை ஆட்டம் சரித்திர சாபத்தின் அந்திமப் புலம்பல் உடமை மறுத்தது பழங்கதைப் பிறப்பு உரிமை பறிப்பது புதுக்காவிய வித்து நாமே பாண்டவர் பண்டு ஆண்டுவர் அவரோ கவரவர் கவரும் பண்பினர் சூதை வளர்க்கும் சகுனிச் சீனன் கீதை உரைக்கும் சாரதித் துங்கு தூது பொய்த்திடும் தீயோர் மன்றம் களமோ பெரிது காணும் உலகே குருக்ஷேத்திரம். |
| (எழுத்து- 84) |
சி.சு. செல்லப்பா வேறொரு கோணத்தில் அந்த சரித்திர நிகழ்ச்சியைக் கண்டு ‘பகைத் தொழில்’ எனும் கவிதையை எழுதியிருக்கிறார். |
| ‘கிழிபடு போர், கொலை, தண்டம் பின்னியே கிடக்கும் அரசியலதனில்’ கொலை வழி உதறி அறவழியாலே கதிகாண வழிவகை காட்டிக் கிழக்கே பகைத்தொழில் மறக்க வைத்த முதல்வன் ஒத்துழையாமையான் காலமும் போச்சு; அழிசெய் நியூகிளியர் ஆயுதம் ஓங்கியே சீறிடும் ‘ரட்சகர்’ கையில் அருள் வழி சிதற மறவழி பற்றி கதிகலங்கச் சதிவகைகள் செய்து கொடுந்தொழில் பரவச் செய்யும் மேற்கே ஒத்துப்போகார் காலமும் ஆச்சு! என்று நாம் கணித்திருக்கும் வேளை அண்டை நட்பும் சகவாழ்வும் கானல் நீராச்சு; வரம் கொடுத்த தலைமேலே கைவைக்க எல்லையில் முழுவடிவைத் தின்ன வந்த பிறை வடிவோன் ‘பாய் பாய்’ குளிரப் பேசி பழமை பாசம் பேசி பசப்பி விளிம்பில் இமயப் பாய் சுருட்ட வந்தோன் சுயாட்சிக்குத் தந்த ஆதரவு மறந்து நடுக்கடலில் நின்று ஊளையிடும் நம்பெயர் பாதி கொண்ட உதிரித் தீவோன் மூக்கூட்டாய்ச் சேர்ந்து பகைத் தொழில் வளர்க்க புறப்பட்ட கதையே இன்றைய நிஜமாச்சு. உழக்கிலே கிழக்கு மேற்கா? கிழக்கிலும் மேற்கு, மேற்கிலும் கிழக்கு பகைத் தொழிலுக்கா காலம்? |
(எழுத்து-85) |