பக்கம் எண் :

147  வல்லிக்கண்ணன்

     காதடைக்கும் இரைச்சலுடன் டவுன் பஸ்கள் வருகின்றன. போகின்றன, இவனுக்கு
இடம் இல்லை.
 
  சற்றே
மிகச் சற்றே தயங்கிப் பின் தங்கி
இட்ட அடிக்கும் எடுத்த அடிக்கும்
இசைந்தே ஆடும் சடையழகை
நெளிந்தே குலையும் பின்னழகை
வெறித்து நோக்கி விருந்துண்டு,
 
     கிறங்கிடும் மனம் அவள் தோளில் கைபோட்டு நடந்து, தொட்ட சுகம் மயக்க
இடித்தும் இணைந்தும் சென்று, கடற்கரையில் தனிமை இடம் தேடி இன்பம் சுவைத்து
வியக்கிறது.

     நின்ற இடத்திலேயே நிற்கும் அவனுள் ஆசை மலர்கள் விரிகின்றன.

     பஸ் வரும். போகும். ஒரு கப் காபி கரைந்து போயிற்றே என்ற தவிப்பு
தலைதூக்குகிறது.

     அவனது ‘சிவப்புச் சேலை அழகி’ சிறிது நின்று போக மாட்டாளா என்ற ஏக்கம்.
பயன்தான் இல்லை.
 
  செல்வம் இளமை யின்மை
நடைபாதையில் காக்க வைக்கும்
கூட்டம் குறையும் வரை.
பொறுமை தீரும் வரை
மயக்கம் தள்ளும் நேரம்
சிவப்பழகி சற்று நிற்க
புத்துணர்ச்சி துளிர்க்க..
 
     இவனுக்கு இடம் கிடைத்து விடுகிறது. ‘காசம் பிடித்து உலுக்குவதுபோல், துடிக்கின்ற
பழுதுடல்’ பஸ் சூடேறிய காற்றோடு, டீசலின் பெரு நாற்றத்தோடு நகர்கிறது. அந்தச்
சூழலிலும்,
 
  பக்கத்து மங்கையின் உரசல்
பல்லற்ற வாய்க்குக் கரும்பு:
ஆசைக்கு அழிவேது?
செல்வம் மங்கை பெருமை இளமை
இவைகளுக்கு அழிவேது?
ஆயினும் இவன் நிலைமையோ?
முதுமை.
வறுமை,
சிறுமை.
நாய் வால் முதுகு.
சீவாத தலையாகக் கலைந்து
சிதறிக் கிடக்கும் தாள்கள்,-
இப்பிறவியில் விடிவில்லை.
 
     பற்றாக்குறைச் சம்பளம், பொழுதுபோக்கு இன்றிக் கூடிப் பெற்ற ஒன்பது செல்வங்கள்,
நீங்காத ஆஸ்த்மா, நிரந்தரத் தொல்லைகள்;