பக்கம் எண் :

249  வல்லிக்கண்ணன்

காட்டின. அதனால் சகட்டுமேனிக்கு பலப்பலரும் ‘கவிதை’ எழுதி, ‘கவிஞர்’ என்று
சொல்லிக் கொள்வதில் உற்சாகம் கொண்டனர்.

     புதுமையாக எழுத வேண்டும், கருத்து - கற்பனை - அழகு - ஆழம் முதலியன
அமையக் கவிதை எழுத வேண்டும் என்ற உணர்வு பத்திரிகைகளுக்குக் கவிதை
எழுதுவோரிடம் இல்லை. நாமும் கவிதை எழுதுகிறோம்: நம் பெயரும் அச்சில் வர
வேண்டும் என்ற எண்ணத்துடனேயே மிகப் பலர் எழுதுகிறார்கள். முன்பு பலரும் எழுதிய
பொருள்களையே திரும்பத் திரும்பக் கவிதைக்கு உரிய விஷயமாக்குகிறார்கள். சாரமற்ற,
உணர்ச்சியற்ற, உரைநடையிலேயே எழுதுகிறார்கள். அவையே ‘கவிதை’ என்று
பத்திரிகைகளாலும் வெளிச்சமிடப்படுகின்றன.

     சமீபகாலத்தில், ‘ஹைக்கூ’ மோகம் வேறு இவர்களைப் பிடித்து ஆட்டவும்,
கவிதையின் பாடு மேலும் மோசமாகப் போய்விட்டது! மூன்று வரி - நான்கு வரிகளில்
எதையாவது எழுதி ‘ஹைக்கூ’ என்று பெயர் பண்ணுவது சர்வசாதரணமாக வேலை
ஆகிவிட்டது. வாழ்க்கை பற்றி ஆழ்ந்த எண்ணமோ, அனுபவத்தினால் ஏற்படக்கூடிய
தனித்த நோக்கோ, தத்துவப் பார்வையோ தேவையில்லை என்றாகி விட்டது இன்றையக்
கவிஞர்களுக்கு. இவற்றை எல்லாம் பெறுவதற்கு அவர்கள் தங்களைத் தாங்களே தகுதிப்
படுத்திக் கொள்வது மில்லை.

     இதனால் எல்லாம் கவிதை ஒருதேக்க நிலையை அடைந்துள்ளது போல்
தோன்றுகிறது.

     உண்மையில், தமிழ்க் கவிதை வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், மெது
மெதுவாக, நல்ல கவிதைகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

     காலம் தோறும் அப்படிப்பட்ட கவிதைகள் அபூர்வமாக வேனும் வெளிவந்துள்ளன.
பத்தரிகைகள் பலவற்றிலும் சிதறிக் கிடக்கின்ற இத்தகைய நல்ல படைப்புகள் பலவற்றிலும்
சிதறிக் கிடக்கின்ற இத்தகைய நல்ல படைப்புகள் தொகுக்கப்பட்டு, உரிய முறையில் நூல்
வடிவம் பெறுவது கவிதைக்கு லாபமாக அமையும். அப்படிச் செய்ய வேண்டும் என்ற
விழிப்பு உணர்வு சிறிது சிறிதாக ஏற்பட்டு வருகிறது. செயல் மலர்ச்சி பெறுவதற்குக் காலம்
துணைபுரிய வேண்டும்.