பக்கம் எண் :

57  வல்லிக்கண்ணன்

  ஓடுகிறீர்
ஓடாதீர்!
உமைப்போல நானும்
ஒருவன் காண்!
ஓடாதீர்!
 
     திருலோக சீதாராம், 1944 டிசம்பரில் கிராம ஊழியனை விட்டு விலகி, திருச்சி
சேர்ந்து ‘சிவாஜி’ வாரப்பத்திரிகையின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பிச்சமூர்த்தி
எப்பவாவது அவ்வார இதழிலும், ‘சிவாஜி’ ஆண்டு மலரிலும் கவிதைகள் எழுதி வந்தார்.

     யாப்பில்லாக் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த ந.பி. இலக்கணத்துக்கு உட்பட்ட
கவிதைகள் எழுதுவதிலும் கவனம் செலுத்தலானார். அதன்படி அவர் எழுதிய சில
கவிதைகளும் ஊழியனில் பிரசுரமாயின.

     1945--ல் அவர் அகலிகை கவிதைக்குப் புது அர்த்தம் கற்பித்து அகலிகையை உயிர்
என்றும், கோதமனை மனம் என்றும், இந்திரனை இன்பஉணர்வுகள் என்றும் உருவகித்து,
ஒரு காவியம் படைத்தார். கட்டிலடங்காக் கவிதைகளில் அமைந்த ‘உயிர் மகள்’ என்ற
அந்தப் படைப்பும் ஊழியன் இதழில் வெளிவந்தது.

     எம்.வி. வெங்கட்ராமும் புதுக்கவிதை எழுதுவதில் உற்சாகம் காட்டினார். அவர்
கவிதைகளை ‘விக்ரஹவிநாசன்’ என்ற புனை பெயரில் எழுதினார். ‘அன்னபூரணி
சந்நிதியில், அவரது கவிதைகளில் குறிப்பிடப்பெற வேண்டிய படைப்பு ஆகும்.
 
  சிலா சுந்தரி, தேவி, அன்னபூரணி!
எனது நகைமுகமும் நிறை கலசமும்
கலைக்கு ஓர் இலக்கு ஆயின;
காவியரும் ஓவியரும் எழுத முயன்று
எழுதுகோல் தேய்ந்தது!
என்று மமதையுடன் நிமிர்ந்து நிற்கிறாயல்லவா? நில்!

மண்ணையும்
எங்கோ உள்ள விண்ணையும்
ஒன்றாகப் பிணைப்பேன் என்று
அன்று சிற்பி கண்ட கனவைத்தான்
மண்ணும் எங்கோ கிடந்த கல்லும்
கரமும் கொண்டு,
சிலையாக்கி-உன்னைக்
கடவுளாக்கினான் எனில்-
காரணம்?
கலையன்றி வேறன்று என்றறி!

கலையை இகழ்வாரும்
கலையை அறியாரும்
கல்லே! உன்னைப் பணிகிறார் எனில்-