| புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 58 |
| காரணம்? கலையன்றி வேறன்று என்றறி! கலையும் அழகும் மனமுவந்து கலவி கொண்டதால் விளைவான தேவி! அன்று சிரித்தாய், நாளை சிரிப்பாய், இன்றும் சிரிக்கின்றாய் எனில்- காரணம்? கலையின்றி நீ இல்லை என்றறி! | தி.க. சிவசங்கரனும் ஊழியனில் புதுக் கவிதைகள் எழுதி வந்தார். அன்று அவர் வெறும் இலக்கியவாதி. கால வேகத்தில், கம்யூனிஸ தத்துவம் அவர் கருத்தைக் கவர்ந்தது. அதன் பாதிப்பு படிப்படியாக எழுத்துக்களில் படியலாயிற்று. சமூக நோக்குடன், ‘எதார்த்த இலக்கியம்’ படைப்பதில் அவரது கவனம் திரும்பியது. வாழ்க்கை வசதிகள் வஞ்சிக்கப்பட்டோர், முதலாளி வர்க்கத்தினரால் சுரண்டப்படுவோர், வறுமையின் கோரப்பிடியில் சிக்கியோர் பற்றி எல்லாம் அவர் கவிதைகள் எழுத ஆசைப்பட்டார். அந்த எண்ணங்களைப் பிரதிபலிக்கும் அவரது வசனகவிதைகள் ஒன்றிரண்டு ஊழியனில் இடம் பெற்றன. என்றாலும், அந்நோக்கில் அன்று அவர் தீவிரமாக ஈடுபட்டிருக்கவில்லை. மின்னல், அழகுப் பெண் போன்ற விஷயங்களும் அவருடைய ரசனைக்கும் எழுத்துக்கும் உரிய பொருள்களாகத்தான் இருந்தன. அக்காலத்திய அவரது கவிதைக்கு இதோ ஒரு உதாரணம் | உலவும் கவிதை | | பில்லுக் கட்டைத் தலை சுமக்க பில்லரிவாள் இடையிருக்க அந்தி ஒளி சாய்கையிலே அவள் அசைந்து போறாளே! புதுக் கள்ளின் நுரைபோலே பொங்கி வரும் புத்தழகு மங்கி வரும் கதிரொளியில் மயக்கந்தரு குதையோ! அணில் கடித்த மாம்பழம் போல் அழகு சொட்டும் செவ்விதழ்கள் சருகான வெற்றிலையில் அமுதினிமை கண்டனவோ! காதிற் சுருளோலை கண்டத்தில் பாசிமணி அரையிற் கிழிந்த உடை | | |
|
|