பக்கம் எண் :

59  வல்லிக்கண்ணன்

  அமைவான குலுக்கு நடை
அத்தான் வந்திடுவான்
அந்திவரை உழுது விட்டு;
சித்தெ முந்திப் போகவேணும்
செம்மறியைக் கட்டவேணும்
என்றெண்ணம் ஓடி வந்து
இங்கு முகம் திருப்பி நிற்க...
சலங்கை ஒலி சிந்தி விட்டு
சாடி வரும் இளமறியும்;
அப்போது பார்த்து விட்டேன்
அவளழகு முழுவதையும்
என் நெஞ்சைக் கிளறிவிட்ட
எழுதவொண்ணாக் காவியத்தை!
 
     1947 மே மாதம் ‘கிராம ஊழியன்’ நின்று விட்டது. இறுதிவரை அந்த மாதம்
இருமுறைப் பத்திரிகை வசன கவிதை வளர்ச்சிக்காக முழு மூச்சுடன் உழைத்து வந்தது.