பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 60

மற்றும் சில

 
     ‘கிராம ஊழியன்’ நின்ற பின்னர், நான் அவ்வப்போது, ‘சினிமா உலகம்’ இதழ்களில்
கவிதை எழுதிக் கொண்டிருந்தேன்...

     ஊழியன் மூலம் எழுத்துலகுக்கு அறிமுகமான திருவனந்தபுரம் எஸ்.சிதம்பரம்
(வைரம்) 1946-ல் ‘கவிக்குயில்’ என்ற பெயரில் மலர் ஒன்றை தயாரித்தார். அதற்கு
என்னுடைய ஒத்துழைப்பு அதிகம் இருந்தது. 1947-ல் இரண்டாவது மலர் வெளியிட்டார்.
இரண்டு மலர்களிலும், மரபுக் கவிதைகளும், புதுக்கவிதைகளும் மிகுதியாகவே இடம்
பெற்றன.

     தி.க. சிவசங்கரனின் ‘சமுதாயப் பார்வைக் கவிதைகள், அம்மலர்களில் பிரசுரமாயின.
அவரது பரிணாமத்தைக் காட்ட ‘அங்கே’ என்ற கவிதை உதவும்...’
 
          1
சாக்கடைச் சோற்றை
யாம் உண்கிறோம்;
அங்கு
சர்க்கரைப் பொங்கலை
ஜமாய்க்கிறார்!

        2

கந்தையால் மானத்தைக்
காக்கிறோம்; வாடைக்
காற்றிலே நடுங்கித்
துடிக்கிறோம்.
சிந்தையில்அருளிலாப்
பாதகர்-அங்கே
சீமைத்துணிக்கு
அலைகிறார்.

        3

மெத்தைக்குப் பூந்துகில்
வேண்டுமாம்!
மேனியைப் பஞ்சனை
உறுத்துமாம்!
செத்தையில் குப்பையில்
படுக்கிறோம்!
தேள்களும், ஈக்களும்,
மூட்டையும்
கொத்திப் பிடுங்கினும்