பக்கம் எண் :

61  வல்லிக்கண்ணன்

  துங்குறோம்;
கோடையில், வாடையில்
சாகிறோம்.

        4

கூழுக்கு விதியின்றி
அலைகையில்--அங்கே
கோப்பையில் சாராயம்
ஓடுது!
அம்மையின் மார்பில்
ரத்தத்தை-எங்கள்
அருமைக் குழந்தை
குடிக்கையில்
‘ஆர்லிச்சு’ மாவுக்கு
அலைகிறார்; அதற்கு
ஆயிரம் பேரு
சிபாரி

        5

கொண்டவன் சீக்கிலே
சாய்ந்திட,
கூடவே யிருந்து
குமைகிறோம்.
அங்கே--
அண்டை வீட்டுக்காரன்
குட்டியை
அடித்துக் கொண்டுபோக
யோசனை.

        6


எங்கள் குறைகளை
இயம்பினேன்.
அதற்கென்றே பரிகாரம்
தேடுவீர்!
‘இல்லாத சாதி’ யென்
றிகழ்ந்திடில்-இனி
நில்லாது எங்கள்
கைச் சுத்தியல்!
 

     புதுமைப்பித்தனின் ‘மாகாவியம்’-காளான் குடை நிழலில் கரப்பான் அரசிருக்க என்று
ஆரம்பித்து வளரும் கவிதை-கவிக்குயில் இரண்டாவது மலரில் வெளிவந்தது.

     ‘தமிழ்க்குமரி’, ‘அகல்யா’ முதலிய அற்புதமான கவிதைகளை இயற்றிய கவிஞர் ச.து.சு.
யோகியாரும் சோதனை ரீதியாக ‘காட்சி’ என்ற தலைப்பில் சில வசன கவிதைகள் எழுதி
வைத்திருந்தார்.

     அச்சில் வந்திராத அவற்றை ‘சினிமா உலகம்’ இதழ்களில் நாங்கள்