| புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 62 |
பிரசுரிக்க முற்பட்டபோது, அவர் தடுத்து விட்டார். அவரது படைப்புக்கு உதாரணமாக ஒரு காட்சியைத் தர வேண்டியது அவசியம் எனக் கருதுகிறேன். இது ‘சினிமா உலகம்’ இதழில் பிரசுரமானது. | | 1 அவள் யார்? வான் கடல் மீது மதியத் தோணி மிதக்கும் போது விரிகடல் மீதோர் புது மதி மிதந்து புன்னகை பூத்தது அவள் யார்? அழகுக் கடலை அமுதக் கோலால் கடையத் திரண்ட காதலின் வெண்ணெய் 2 கூந்தல் காதற் பறவையின் கவினுறுஞ் சிறகுகள் வகிடு கருமுகில் திரளிடைக் கதிர்விடும் மின்வரி 3 மதிமுகம் என்பார்; மதியை யம்முகத்திற் கொப்பிடல் மடமை ஓண் மதி யவள் முகம் ஓரளவொக்கும் 4 கண்கள், வான் போல் விரிந்தவை, வாரி போல் ஆழ்ந்தவை கால் போற் கலங்கும், பனி போல் மயங்கும், வசந்தமாய்ச் சிரிக்கும், வேனிலா யெரிக்கும், காதலிற் களிக்கும், கடை நுனி சுளிக்கும்; கண்ணூடாடும் கருவிழிப் பாவைகள் வெள்ளை மதுவில் மிதக்கும் நாகப் பழம்; வைர வெள்ளத்தே மரகதத் தோணிகள், நிலவுக் கடலில் நீந்தும் வண்டுகள் அக்கண்ணுக் கிணை இக்கண். 5 பூவிற் கனியுண்டாம், கனியிற் பூ மலரா; ஆயினும் அவளது கன்னம் என்னும் கனிந்த மாங்கனியில் காதலாம் ரோஜாக் கவின் மலர் சிரிக்கும் 6 காதல் மதுக் கடல் கனிவாய், அதன் கரை | | |
|
|