பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 64

  அழகு வயலின் ஆசை மலரே-உன்
காம்பெது வேரெது விதையெது? மணியாய்
வியப்புறு விளைவே வெறியன் கண்ட

            13

காற்றவளுடலைத் தழுவக் காதலாய்
வருவதைக் கண்டவன் வனை துகிற்பட்டு
காற்றொடு பொறாமையாய்க் கடும்போர் புரியும்,
தங்கச் சரிகை வான் பொங்கிக் குதிக்கும்
அல்ல, அல்ல; அவளிப்போது தான்
வானத் திருந்து வையத் திறங்கினாள்
இன்னும்
பட்டுச்சிறகு பட படக்கின்றது.

            14


முதல் முதலாய்க் காதலியைச் சந்தித்த மோகனத்தில்
கண்களவன் கண்ணுக்குக் களவா யொளித்தமையால்
கண்ணைப் பிடிக்கக் கருத்தோடிப் போனதுவே.
கருத்தைப் பிடிக்கக் கவினுள்ளம் தானேகும்.
உள்ளம்தனைப் பிடிக்க உயிரோடிப் போயிற்றால்
ஓடமுடியாத உடல் மட்டும் ஓய்ந்ததுவே.

            15

கண்ணும் கண்ணும் கவ்வின, எண்ணம்
எண்ணம் ஒன்றாயிணைந்தன; இருவர்
பார்வையும் ஒரு கண நெடுமைப் பார்வையாய்ப்
பளிச்செனச் சுளித்தது; ஒளிச்சது ஒருவரை
ஒருவர் காண வெட்கினோம்; உடலம்
நடுங்கக் கவிழ்ந்தோம். ஆயினென் நாட்டம்
வேறொன்றும் காண்கில; விம்மிதமுற்றோம்.
 

     ச.து.சு. யோகியார், வால்ட் விட்மனின் ‘லீவ்ஸ் ஆஃப் கிராஸ்’ தொகுதியிலிருந்து
தேர்ந்து எடுக்கப்பட்ட கவிதைகள் பலவற்றைத் தமிழாக்கினார். அவ்வசன கவிதைத்
தொகுப்பு ‘மனிதனைப் பாடுவேன்’ என்ற பெயரில் பின்னர் ‘ஜோதி நிலைய வெளியீடு’
ஆகப் பிரசுரமாயிற்று.

    இவ்வாறாக 1940கள் வசன கவிதையின் வளமான வளர்ச்சிக்கு ஏற்றகாலகட்டமாக
விளங்கியது. அந்த-தசாப்தத்தின் இறுதியில், வசன கவிதைக்கு ஆதரவு தந்த பத்திரிகைகள்
நின்று போயின. ந. பிச்சமூர்த்தி ஒருவித விரக்தி மனநிலையில், கதை, கவிதை; கட்டுரை
எதுவுமே எழுதாமல் ஓய்ந்து ஒதுங்கிவிட்டார். ஆகவே ‘புதுக்கவிதை’ தேக்க நிலையுற்றது.