மூன்றாம் பதிப்பின் குறிப்புரை |
|
‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி திரு. வல்லிக்கண்ணன் தீபம் இதழில் எழுதிய கட்டுரைத் தொடரை முதல்முதலில் (!977) நூல்வடிவில் திரு.சி.சு. செல்லப்பா தம் எழுத்து பிரசுரம் வெளியீடாகக் கொண்டு வந்தார். |
அதன் இரண்டாம் பதிப்பை அகரம் வெளியிட்டது; இப்போது மூன்றாம் பதிப்பை அன்னம் வெளியிடுகிறது. ‘ஒரு விளக்கம்’ என்னும் புது அத்தியாயமும் இதில் இடம் பெற்றுள்ளது. 1979 வரை வெளிவந்த புதுக்கவிதை நூல்களின் பட்டியல் ஒன்றும் நூலின் இறுதியில் தரப்பட்டுள்ளது. |
1978 ஆம் ஆண்டின் சாகித்ய அகாடமிப் பரிசு இந்நூலுக்கு வழங்கப் பெற்றிருக்கிறது. திரு. வல்லிக்கண்ணனின் நாற்பதாண்டுக் கால இலக்கிய சேவைக்குக் கிடைத்த கௌரவமாக மட்டுமல்லாமல் புதுக்கவிதைக்குக் கிடைத்த அங்கீகாரமாகவும் இதனை அன்னம் மதிக்கிறது. |