பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 84

என்றும் தெளிவுபடுத்திக் கொண்டது.

     ‘சுவடு தெரிகிற தடத்திலே செல்ல மறுத்து, புதுத்தடம் போட்டுக் கொண்டு
இலக்கியத்தின் எல்லைகளைச் சற்று விரிவடையச் செய்ய முயல்கிறவர்களின் படைப்புகளை
வரவேற்பது என்பதை ‘எழுத்து’ தனது லட்சியமாக வரித்துக்கொண்டது. அதனால்,
கவிதைத் துறையில் புதுக்கவிதைக்கு அது இடம் அளிக்க முன் வந்தது.

     முதல் இதழில், ந.பிச்சமூர்த்தியின் ‘பெட்டிக்கடை நாரணன்’ என்ற கவிதை வெளி
வந்தது. அது ‘எழுத்து’க்காக விஷேசமாக எழுதப்பட்டு அல்லது பங்கீட்டு முறை அமுலில்
இருந்த காலத்தில் எழுதப்பட்ட கவிதை.

     எப்படியும் பிழைப்பது என்று துணிந்து விட்ட நாரணன் பெட்டிக் கடை வைத்து,
ஏற்றம் பெற்று மளிகைக் கடை முதலாளி ஆகி, மண்ணெண்ணெய்ப் பங்கீடு, அரிசிப்
பங்கீடு ஆகியவற்றின் துணையோடு பெரும் பணக்காரன் ஆனதை அழகாக வர்ணிக்கும்
கவிதை. வாழத் தெரிந்தோர் கையாளும் யுக தர்மங்களையும் அவர்களுடைய ‘வாழ்க்கை
நோக்கையும் சுவையாகவும் கிண்டல் தொனியோடும் இக்கவிதை எடுத்துச் சொல்கிறது.

     க.நா. சுப்ரமணியம் கவிதைகள் இரண்டு, ‘கவிதை’ என்ற சொந்தப் படைப்பும்,
‘ஆங்கிலக் கவி ஒருவர் எழுதியதைப் பின்பற்றி, எழுதப்பட்ட ‘வர்ணம்’ என்பதும்-
வந்திருந்தன.

     முதல் வருடத்தில் ந.பி. கவிதைகள் மூன்றே மூன்றுதான் (பெட்டிக்கடை நாரணன்,
விஞ்ஞானி, கலீல் கிப்ரான் தமிழாக்கமான ‘ஜீவா! தயவுகாட்டு’) பிரசுரமாயின 1.2.3.
ஏடுகளில்,

     ‘எழுத்து’ முதல் ஐந்து ஏடுகளில் க.நா.சுப்ரமண்யம் கட்டுரைகளும் கருத்துக்களும் மிக
அதிகமான இடம் பெற்றிருந்ததைப் போலவே, முதல் வருடத்தில் (ஏழு ஏடுகளில்) அவரது
கவிதைகளும் அதிகமாகப் பிரசுரமாகியிருந்தன.

     க.நா.சு சோதனை முயற்சிகள் என்றே கவிதைகள் எழுதினார் என்பதற்கு அவருடைய
வரிகளையே எடுத்தெழுதுவதுதான் நல்லது.

     ‘கவிதையில் நான் செய்ய முயற்சித்ததெல்லாம், விஷயத்தையும் வார்த்தைகளையும்
உள்ளத்து உண்மையிலே குழைத்து காதும் நாக்கும் சொல்லுகிற கட்டுப்பாடுகளுக்கும் கண்
தருகிற கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டு எழுதுவது என்கிற காரியம்தான்; இன்றைய
உண்மையை நிரந்தரமாக்குகிற காரியம்தான், இன்றைய என் அனுபவத்தை வார்த்தைகளால்,
பேசும் சந்தத்தில்இலக்கியமாக்க, கவிதையாக்க முயலுகிறேன். பயன், கழுதையா, குதிரையா,
வசனமா கவிதையா, இலக்கியமா பிதற்றலா என்று கேலி செய்பவர் இருக்கலாம். சோதனை
என்று சொல்லும் போது இதற்கெல்லாம் பயப்பட்டுக் கட்டாது. இலக்கிய சோதனைகள்
பலவும் ஆரம்பத்தில் கேலிக்கிடமாகவேதான் காட்சியளித்துள்ளன.

     ‘என் புதுக்கவிதை முயற்சிகள் கவிதையாகவும் இலக்கியமாகவும் உருவெடுக்க,
வாசகர்கள் ரசிகர்கள் உள்ளத்தில் எதிரொலித்துப் பயன்தரப் பல காலமாகலாம்
என்பதையும் அறிந்தே நான் இந்தக் கவிதைச் சோதனையைச் செய்து பார்க்கிறேன்.
நம்முடைய இன்றைய தினசரி வாழ்விலே இடம் பெறுகிற விஷயங்கள் எல்லாமே
உவமைகள்,