பக்கம் எண் :

95  வல்லிக்கண்ணன்

படைப்புகளைப் பின்பற்றி எழுதப்படும் மெட்டுப் பாட்டுகள் எல்லாம் கவிதைகள் என்று
கருதும் ஒரு ஏற்புநிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலை கவிதை வளர்ச்சிக்குப்
பெரிதும் பாதகமாக இருக்கக்கூடியது.

     எனவே, கவிதைக்கு வேண்டிய இசைத் தன்மை பிச்சமூர்த்தி கூறியதுபோல ‘சவுக்கைத்
தோப்பின் வழியே காற்று பாய்ந்து சென்ற பிறகு தோன்றும் ஒரு ஓயுமொலி’ என்பதுதான்
முக்கியம். ஓயுமொலி சொப்பனக் குரல் மாதிரி நம் காதுகளில் தாக்கக்கூடியதாக
இருக்கக்கூடியதாக இருக்கவேண்டும். இந்த ஓயும் ஒலி சொப்பனக் குரல்தான் ஒலிநயம்
என்று சொல்கிறோமே அந்த மென்மையான இசைத்தன்மை வாய்ந்தது. இந்த ஒலிநயம்
சுருதிமீட்டலாக ஓடும் கவிதையில். வசனத்திற்கும் ஒலிநயம் உறவு உண்டு என்றாலும்
கவிதையில் உள்ள ஒலிநயத் தோற்றமே வேறு. இந்த ஒலிநயத்தைக் கொணர்வதில் தான்
கவிஞன் சாமர்த்தியம் இருக்கிறது.சந்தத்தைக் கொண்டு வார்த்தைகள் ஓசையை
தாளப்படுத்திக் காட்டி கவிதையை உணரச் செய்வதுதான் என்பதல்ல.

     இந்த மென்மையான ஒலிநயத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதுதான்
புதுக்கவிதை முயற்சி. சந்த அமைப்பு ஒழுங்கற்று கையாளப்பட்டிருக்கலாம். இதைப்பற்றிய
அக்கறை இல்லாமலும் இருக்கலாம். ஆனால் ஒலிநயம் அதில் இருக்கத்தான் செய்யும்.
இதனால் மரபான கவிதையில் ஒலிநயம் இல்லை என்று சொல்லிவிட முடியாது. சந்தமும்
எதுகை மோனையும் சொற்கட்டும் ஒலிநயத்தை ஏற்றக்கூடியவை தான். அதை உணரச்
செய்ய வைப்பவைதான். ஆனால் சீர் அசை தளைகளின் மூலம் கட்டுப்படுத்தப்பட்டு
வெளித் தெரியும் படியான தாளக்கட்டுடன் அமைந்த கவிதைகளை விட புதுக்கவிதையில்
ஒலிநயத்துக்கு இடம் அதிகம்.

     ‘மரபுக்கிணங்கிய கவிதையில் ஒலிநயம் என்று தனியாக இருப்பதாகக் கூறுவதே ஒரு
பிரமை என்று வாதிக்க இடம் இருக்கிறது’ என்று பிச்சமூர்த்தி கூறுகிறார். ‘ஒலிநயம் என்ற
குணநியதியை முற்றாக புறக்கணிப்பது வசன கவிதை’ என்கிறார் முருகையன். ‘வசன
கவிதை என்பது கவிஞன் தன் உணர்வை தோன்றிய போக்கில் சிதறவிடுவதாகும்’
என்கிறார் கைலாசபதி. ஆனால் இந்த மூன்றுக்கும் பதில் சொல்வது போல
அமைந்திருக்கிறது. புதுக்கவிதை முயற்சியில் முழு மூச்சுடன் ஈடுபட்டிருந்த கு.ப.
ராஜகோபாலன் எழுதியுள்ள சிலவரிகள்.

     “வசன கவிதைக்கும் யாப்பிலக்கணம் உண்டு. அதிலும் மாவிளங்காய் தேமாங்கனி
எல்லாம் வந்தாக வேண்டும். வரும் வகை மட்டும் வேறாக இருக்கும். வசன கவிதைக்கும்
எதுகை மோனை கட்டாயம் உண்டு. ஏனென்றால் இந்த அலங்காரங்களை எல்லாம்
உள்ளடக்கினது கவிதை. அது அவற்றை இஷ்டம் போல மாற்றிக் கொள்ளும். முதலில்
உண்டாக்கினபடியே இருக்கவேண்டும் என்றால் இருக்காது.”

     கு.ப.ரா. புதுக்கவிதை முயற்சி பற்றிக் கூறியுள்ள இந்த வரிகள் திட்டவட்டமாகவே
அதன் தன்மை பற்றி தெரிவிக்கின்றன. புதுக்கவிதையில் ஒலிநயம் இருப்பதன் அவசியத்தை
அவர் உணர்ந்திருப்பது தெரிகிறது. அதை வெறும் பிரமை என்று தள்ளினதாகத்
தெரியவில்லை. அவர் கூறி இருப்பவைகளுடன். ‘ஃப்ரி