| நல்லவழக்கங்கள் உள்ளவர் தங்களை நாடுமோ நோவுகள் எந்நாளும் நல்லவழக்கங்கள் நாளும் வளர்த்திட நாடுசெழித்திட வேணுமடி. | | வாழ்க! வாழ்க!! | | வாழ்க வாழ்க உலகெலாம் வாழ்க எங்கள் தேசமும் வாழ்க எங்கள் தமிழகம் வாழ்க எங்கள் மனையறம் வாழ்க மேழிச் செல்வமே வளர்க நாட்டுக் கைத்தொழில் வாழ்க எங்கள் வாணிபம் வாழ்க நல்ல அரசியல் அன்புகொண்டு அனைவரும் அச்சமின்றி வாழ்கவே துன்பமேது மின்றிநம் துக்கம் யாவும் நீங்கியே இன்பமான யாவுமெய்தி இந்தநாட்டில் யாவரும் தெம்பினாடு தெளிவுபெற்றுத் தேவர்போற்ற வாழ்குவோம். | | |
|
|