சுகாதாரக் கும்மி | | கும்மியடிப்பெண்கள் கும்மியடி குல தெய்வத்தைக் கும்பிட்டடியுங்கடி நம்முடை தேசத்தில் நோய்களில்லாமலே நாடுசெழித்திட வேணுமென்று. செத்தவர் தம்மை எழுப்பித்தரவல்ல சித்தரிருந்த திருநாட்டில் எத்தனைஎத்தனை நோய்களினால் மக்கள் ஈசலைப்போல மடிவதென்ன! ஈசனளித்த அறிவிருந்தும் நல்ல இயற்கை விதிகளை விட்டுவிட்டு மோசமிகுந்த பகட்டுடை வாழ்க்கையில் மோகம்வைத்தே இந்த மோசமுற்றோம். சுத்த உணவிலும் சுத்த உடையிலும் சொன்னவிதிகளை விட்டுவிட்டோம் நித்தங்குளிப்பதும் பத்தியங்காப்பதும் மெத்தக் குறைந்தது தேசத்திலே. காலையிலெழுந்து நீராடல் கொஞ்சம் கர்த்தனையெண்ணித் துதிபாடல் மாலையிலோடி விளையாடல் இந்த மார்க்கத்தைவிட்டனர் மக்களெல்லாம். அளவையறிந்து புசிப்பதில்லை தங்கள் அளவையளந்து வசிப்பதில்லை களவுக்கும் பின்னால் கதவை அடைப்பவர் காரியம் போலடி கண்மணியே | | |
|
|