| அணியிலே ஆடையாலே அலங்கரித் தோமேயன்றி அறிவிலா ஆசாரத்தால் அழகெதும் செய்தோமில்லை பணியிலும் பணத்திலேயே சுகமெலாம் இருந்தாற்போல பழகினோம் நாமேயன்றிப் பழக்கினோம் மக்கள் தம்மை துணிவிலோம் தூய்மையில்லோம் சுசிகர நடத்தையில்லோம் துவக்குவோம் இனிமேலேனும் நோய்களும் துடைக்கும் வாழ்க்கை. மணத்தையே விரும்பியோடு மலரினைக் கசக்குவார்போல் பணத்தையே பெரிதென்றெண்ணிச் சுகத்தினைப் பழித்து வாழ்ந்து குணத்தையே விலைக்கு விற்றுக் குரங்கினைக் கொண்டாற்போல இனத்தையே பிணிகள் வாட்ட இருந்தனம் அறிவிருந்தும், உண்டியில் ஆசைவைத்தோம் ஒழுக்கமே மறந்து போனோம் பெண்டினார் மக்கள் தம்மை வளர்த்திடும் முறைமைபேணார் மண்டையி லெழுத்திதென்று மயங்கினோம் கர்மம்தன்னை மண்டன நோய்கள் க்ஷாமம் மலிந்திட நலிந்தோமையோ. | | |
|
|