பக்கம் எண் :

தமிழன் இதயம்141

  
  சொற்பனந்தன்னிற்கூட
     எண்ணிடத் துணிந்தோமில்லை
உடல்வலி மிகுந்துநல்ல
     ஊக்கமும் உறுதிபொங்க
உலகினில் இன்பமெல்லாம்
     உயர்வழி அனுபவித்த
திடமுள தீரவீரர்
     திகழ்ந்த இச் சிறந்தநாட்டில்
சிறியதோர் நோய் வந்தாலும்
     தாங்கிடத் திறனில்லாமல்
நடைப்பிணம் போலநாமும்
     நாள்கழித் திருந்தோமையோ!

நாடிலோம் இதனைமாற்ற
     நல்வழி என்னவென்று
மடமையோ மதியோ அன்றி
     விதியெனும் மயக்கந்தானோ
மாற்றநாம் அல்லவென்றால்
     மதியினாற் பயன் தானென்னே!
முற்றிய ஒழுக்கத்தாலும்
     முறைதெரி வாழ்க்கையாலும்
பெற்றவர் காணமுன்னாள்
     பிள்ளைகள் இறந்ததில்லை
கற்றவர் பெரியோர்நித்தம்
     கதைகளிற் சொல்லக்கேட்டோம்
இற்றைநாள் கோடி கோடி
     பிறக்குமுன் இறப்பதேனோ!

பிணியிலே பிறந்துநித்தம்
     பிணியையே அருந்திப் பொல்லாப்
பிணியிலே வளர்ந்து அந்தப்
     பிணியினாற் சாகக்கண்டும்