பக்கம் எண் :

140நாமக்கல் கவிஞர்

  
  விதியாற் சாவது இருந்தாலும்பல
வீணாய்ச் சாவதும் உண்டென்றும்
மதியால் நாமதை மாற்றிடலாமென்ற
மாமுனி யவர்மொழி இகழாதே.
(கொ)

முறையீடு
 
  உலகினிற் சிறந்ததென்றும்
     உருவினிற் பரந்ததென்றும்
உயர்தவ யோகர்சித்தர்
     ஒப்பிலார் இருந்ததென்றும்
பலவளம் நிறைந்ததென்றும்
     பகுத்தறி வுயர்ந்ததென்றும்
படித்தனம் கேட்டோமந்தப்
     பாரத தேசமக்கள்
புலபுல வென்றுநித்தம்
     புதுப்புது நோய்களாலே
புழுக்கள்போல் விழுந்து மாண்டு
     போவதைக் கண்டோமையோ
விலகிட வழிதேடாமல்
     விலங்கினம் போலவாழ்ந்து
விதியென வாதம்பேசி
     வீணராயிருத்தல் நன்றோ?
கற்பமும் அறிந்துகாய
     சித்தியும் கற்றமேலோர்
பற்பலர் இருந்த இந்தப்
     பாரத தேசமக்கள்
அற்பமாய் ஆயுள்குன்றி
     அழிந்திடல் ஏனோவென்று