கோலாட்டம் |
பல்லவி |
| கொஞ்சும் கிளிமொழிக் கோதையரே நாம் கூடியாடுவோம் கோலாட்டம் | |
அனுபல்லவி
|
| மிஞ்சும் பலவித நோய்கைளத் தடுத்திட மெல்லியலே வழி சொல்லிடுவோம். | |
சரணம்
|
| நோய்கள் மிகுந்தது எதனாலேயென்று நுண்ணறிவோடதை எண்ணிடுவோம் தாய்கள் குழந்தையை வளர்த்திடும் வழிகளைச் சரிவரச் செய்திடத் தெரிவதில்லை. | (கொ) |
| பிஞ்சில் வெதும்பிய காய்கறியென்றும் பெரிதாய்ச் செழித்ததைக் கண்டதுண்டோ அஞ்சில் கெட்டது அம்பது வயதிலும் அழியா திருப்பினும் செழியாது. | (கொ) |
| தாயும்தந்தையும் தவறு செய்தாலது தனயரைச் சேர்வது பொய்யாமோ சேயைச் சிசுவினில் கவனிக்கா விடில் சென்மத்தால் வரும் நன்மையுண்டோ | (கொ) |
| கருவில் வளர்ப்பார் கடவுள் பூமியைக் கண்டபின் வளர்ப்பது நாமன்றோ அறிவின்நாமதை அறிந்தே வளர்த்திடில் ஆயுள் நீண்டிடும் நோயுமில்லை. | (கொ) |