பக்கம் எண் :

138நாமக்கல் கவிஞர்

  
  கஷ்டமாகிய வேலையொன்றையும்
     கட்டி நீசெயல் விட்டிடு
நுட்பமாகிய உன்றன் மேனியும்
     நொந்திடில் துயர் தந்திடும்

நீளுமாமலர்த் தாழையோடு
     நிறைந்த மாமரச் சண்பகம்
சூழும்நல்ல மண மிகுந்தவை
     சுந்தரிக்கிவை சூட்டுவோம்
வாழுமந்த வனமுழுவதும்
     வாடையோடிஉ லாவல்போல்
நாளும்நீ உன்றன் வீட்டிலெங்கும்
     நடந்துலாவுதல் வேண்டியே

சேற்றில்நின்று வளர்ந்து நீரினிற்
     சேர்ந்திருப்பினும் தாமரை
சாற்றுமோரள வுக்கு மீறிடத்
     தானருந்துமோ நீரினை
சேற்றின் மூழ்கி இருந்தபோ திலும்
     சொற்பமாகவே சுத்தமாய்ப்
போற்றியுண்ணுதல் வேண்டுமென்றந்தப்
     பூமுடிந்தனள் பூவையே.