கர்ப்பிணிக்குப் பூ முடித்தல் | | கல்லினுட்சிறு தேரையோடு கருவிலேவளர் யாவையும் எல்லையில்பல ஜீவகோடியை எங்குமாய் நின்று காத்திடும் வல்லஎம்பெரு மானருளினால் வஞ்சியேபிள்ளை யாண்டனை நல்லபூமுகை சூட்டுவோமந்த நா தனுந்தனைக் காக்கவே. மல்லிகை நல்ல முல்லையாதிய வெள்ளையாமலர் சூட்டுவோம் சொல்லுமன்னவை வெண்மைபோல நீ சுத்தமாயிரு நித்தமும் பல்லுமுன்றன்ப டுக்கையோடின்னும் பாவையே உன்றன் யாவையும் நல்லவெள்ளை யெனச்சொல்லும்படி நாலும் வைத்திட வேண்டியே. வாடினாலும் வதங்கினாலும் தம் வாடைவீசுதல் வாடிடா நாடியேமரு காமருக்கொழுந் தோடுநன்மகிழ் சூட்டுவோம் பாடுநீமிகப் பட்டபோதிலும் பக்தியோடிரு நித்தமும் தேடியே உன்னைத் தேவன் வந்தருள் செய்குவான் பயமில்லையே தொட்டபோதிலும் சற்றுவாடிடும் சொல்லொணாமிக மெல்லிது இஷ்டமாகவே யாருமாசைகொள் இன்பரோஜா இம்மலர் | | |
|
|